வித்யாசாகர் குளோபல் பள்ளியில் நீச்சல் போட்டி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியில், 18ம் ஆண்டு நீச்சல் போட்டிகள், பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில், வித்யாசாகர் கல்வி குழுமத்தின் தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில் நடந்தன.

டாக்டர் கெளதம் துவக்கி வைத்தார். இப்போட்டியில், 11 வயது முதல் 17 வயது வரை உள்ள, மாணவ, மாணவியர் பங்கேற்று, தனி போட்டிகள், குழு போட்டிகள் மற்றும் நீரிலான ஏரோபிக் நடனம் மற்றும் புகழ்பெற்ற வாட்டர் போலோ நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தன.

நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். மாணவ துணைத்தலைவி சுரசஷா வரவேற்றார். மாணவ துணை தலைவர் முகுந்தார்ரயா நன்றி கூறினார்.



Advertisement