சிவகங்கை நகராட்சி தி.மு.க., தலைவர் மீது வழக்கு
சிவகங்கை: அரசு பணி செய்ய விடாமல் தடுத்ததாக சிவகங்கை நகராட்சி தலைவர் துரை ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை தொகுதி கண்காணிப்பு குழு அலுவலர் மரிய ஆரோக்கிய ரூபிலா. நேற்று முன்தினம் காலை 11:35 மணிக்கு தி.மு.க.,வைச் சேர்ந்தவர்கள் காந்திவீதியில் வாக்காளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்வதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் இவருக்குதகவல் கிடைத்துள்ளது. மரிய ஆரோக்கிய ரூபிலா தலைமையிலான குழுவினர் அங்கு சென்ற போது முதல்வர் ஸ்டாலின் படம், ரூ.8ஆயிரம் என்று அச்சிடப்பட்டஇல்லத்தரசிகளின் கூப்பன்களை தி.மு.க.,வைச் சேர்ந்த பாபு 38 மற்றும் முருகானந்தம் 45 வைத்திருந்தனர். அவர்களிடம் இருந்த 44 டோக்கன்களை பறிமுதல் செய்து அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்து ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்ல மரிய ஆரோக்கிய ரூபிலா கூறியுள்ளார்.
போலீசார் இருவரையும் அழைத்துச் செல்லும்போது அந்த வழியாக வந்த தி.மு.க.,வை சேர்ந்த நகராட்சி தலைவர் துரைஆனந்த் போலீசாருடன் பிரச்னை செய்து அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து பாபு மற்றும் முருகானந்தத்தை அங்கிருந்து அழைத்து சென்றார்.
இதுகுறித்து மரியஆரோக்கிய ரூபிலா நகர் போலீசில் புகார் அளித்தார். துரைஆனந்த், பாபு, முருகானந்தம் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
மேலும்
-
6 தலைப்புகளில் 20 அறிவிப்புகள்: சென்னைக்கான திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
-
மகனை முதல்வராக்குவது தான் ஸ்டாலின் குறிக்கோள்: ஈரோடு ரோடு ஷோவில் அமித்ஷா பேச்சு
-
தமிழக போலீஸ் உளவுத்துறை ஐஜி மாற்றம்
-
இலங்கையில் சிபிஆருக்கு உற்சாக வரவேற்பு
-
வளர்ச்சி என்பது வெறும் வாக்குறுதி மட்டுமல்ல: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
எடப்பாடியில் சுயேச்சைக்கு ஆதரவு: கடைசி நேரத்தில் விஜய் திடீர் முடிவு