பாகிஸ்தானில் துவங்கியது அமைதி பேச்சு: ஈரான் தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சனம்
வாஷிங்டன்: மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதி பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் துவங்கியது. இதனிடையே, ஈரானை தோல்வியடைந்த நாடு என டிரம்ப் விமர்சித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு படைகளுக்கும் இடையே நடந்து வரும் போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சு, நம் அண்டை நாடான பாகிஸ்தானில் நடைபெறுகிறது.
இதற்காக, இரு தரப்பு குழுவினரும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாதில் உள்ள நுார்கான் விமான நிலையத்திற்கு தனித்தனியே வந்தடைந்தனர். அமெரிக்கா சார்பில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஜாரெட் குஷ்னர் மற்றும் ஸ்டீவ் விட்காப் உள்ளிட்டோர் வந்தனர்.ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகர் கலிபாப் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உள்ளிட்ட ஈரான் குழுவினரும் வந்துள்ளனர். அவர்களை பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் வரவேற்றார். இருவரும் தனித்தனியே, பாகிஸ்தான் பிரதமரை சந்தித்து பேசினர்.
இதனை தொடர்ந்து, அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான் இடையே அமைதி பேச்சுவார்த்தை துவங்கியது. திட்டமிட்ட நே ரத்தை கடந்து 5 மணி நேரம் தாமதமாக துவங்கி நடந்து வருகிறது. பேச்சுவார்த்தை துவங்கி நடந்து வருவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இதனிடையே, டிரம்ப் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஈரான் தோல்வியடைந்த நாடு. அதன் ராணுவம், கடற்படை, விமானப்படை என அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பதில் அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளுக்காக செய்கிறோம். இதனை தாங்களாக செய்ய அவர்களுக்கு விருப்பமில்லை. இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறாவிட்டால், மீண்டும் தாக்குதல் துவங்கும் எனக்கூறியுள்ளார்.
இவர் உலகத்தை அழிக்காமல் ஓய மாட்டார்
பாகிஸ்தானை இந்தியா முடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்.
அமைதி மார்க்க பேச்சுக்கு பாக். தகுதியான இடம் கிடையாது. டிரம்ப் விட்டு நேட்டோ நாடுகள் விலகியது தவறு. ஈரான் படை பலத்தை இழந்தாலும், உழைத்து சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. இயற்கை வளம் கொண்டு இழந்த செல்வம் மீட்ட முடியும். அமெரிக்கா இஸ்ரேல் போல் தெளிவான முடிவு எடுக்க அஞ்சுவது ஏன்? இஸ்லாமியர்களுக்கு மதம் முதனிலை என்று போதிக்க படுவதால், ஐரோப்பா போன்ற பிற மத நாடுகள் பாதுகாப்பை இழக்கும்?. மேலும் ரசியா, சீனா ஈரான் சார்பு சரியில்லை. உற்பத்தி நாடு தேவை போக இயற்கை வள வருவாய் ஐ. நா. கணக்கிற்கு செல்ல வேண்டும்.
தேவையில்லாத செயல்களால் ட்ரம்ப் அமெரிக்க மக்களை மிகவும் இம்சிக்கிறார?
ஜனவரி 2026 ல் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா தூக்கும் என்று ... நான் பெட்டிங் கட்டினேன் அதே போல் மதுரோ அரஸ்ட் செய்யப் பட்டார். அதில் எனக்கு கிடைத்த பெட்டிங் தொகை ...டாலர்கள். 2026 ஜனவரி கடைசியில் இஸ்ரேல் ஈரானை தாக்கும் என்று நான் பெட் கட்டினேன் அதனாலும் எனக்கு ஒரு கணிசமான வருவாய் கிடைத்தது. அதே போல் ஈரான் மீது தாக்குதல் நடத்துவேன் என்று சொல்லும் டிரம்ப் உடனே தாக்குதல் நடத்த மாட்டார் என்று சொல்லி பெட் கட்டினேன் . அடுத்ததாக ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் என்று 80% சதவீதம் பேர் பெட் கட்டியவர்களில் நானும் ஒருவன். அடுத்ததாக என்ன நடக்கும் இந்தப் போர் எங்கள் கணிப்பு படி ஏப்ரல் மாத கடைசியில் அதிபர் டிரம்ப் போர் நிறுத்ததை அறிவித்தாலும் ஜூன் கடைசி அல்லது ஜூலை முதல் வாரம்தான் போர் முடிவுக்கு வரும் இதனால் எனக்கு பெட்டிங் தொகை எவ்வளவு வரும் என்று அப்போதுதான் தெரியும். கடைசியாக இஸ்ரேல் மட்டும் தனியாக பாகிஸ்தானை தாக்குமா அல்லது இந்தியாவுடன் சேர்ந்தா என்பது எங்கள் அடுத்த பெட்டிங்! பெட்டிங் நடைபெறுகிறது என்றாலே அந்த செய்தியும் நடைமுறைக்கு வருவதுதானே சாத்தியம்!
Subbu sir...
நடக்கட்டும்..
Enjoy lol
என்ஜாய் பண்ணுவதற்கு
நீ கத்துக்குட்டியா or கண்ணுக்குட்டியான்னு சொல்லு மேன்...
ஈரான் தனது போர் திறனை வெகுவாக இழந்து விட்டது என்பது உண்மை தான் என்றாலும் அமைதி பேச்சு முன்னேற இவர் இப்ப அதை சொல்லாமல் இருக்கலாம்க்ஷமேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
-
அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்