பல் வேர் அறுவை சிகிச்சையில் அலட்சியம் பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு நுகர்வோர் கோர்ட் உத்தரவு
சென்னை: சென்னையில், பல் வேர் சிகிச்சையின் போது அலட்சியத்துடன் செயல்பட்டதால், பாதிக்கப்பட்ட நபருக்கு, 7.1 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் மருத்துவமனைக்கு, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சூளை பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார். இவர், வேலப்பன்சாவடியில் உள்ள சவீதா பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில், கடந்த ஆண்டு பல் வேர் சிகிச்சைக்கு சென்றார்.
சிகிச்சையின் போது, கூர்மையான கருவியை மருத்துவர் தவறவிட்டுள்ளார். அந்த கருவி, வயிற்றுப்பகுதியின் உள்ளே சென்றதால், அருண்குமார் பாதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்களுக்கு பின், இயற்கை உபாதையை கழித்த போது, அந்த கருவி வெளியே வந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவ அலட்சியம், சேவை குறைபாடு நடந்ததாகக் கூறி, தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம், 33 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, அருண்குமாரின் மனைவி சுகன்யா, சென்னை வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த தலைவர் டி.கோபிநாத், உறுப்பினர்கள் கவிதா கண்ணன், டி.ஆர்.சிவக்குமார் அடங்கிய அமர்வின் உத்தரவு:
அறுவை சிகிச்சைக்கு முன், தகுந்த பாதுகாப்பு முறைகளை மருத்துவமனை டாக்டர் பின்பற்றவில்லை. மருத்துவமனை, டாக்டர் மீதான குற்றச்சாட்டுக்கு, மனுதாரர் உரிய ஆதாரங்களை சமர்ப்பித்து உள்ளார்.
எனவே, மருத்துவ அலட்சியம், சேவை குறைபாடுக்கு 5 லட்சம் ரூபாயும், மேல் சிகிச்சைக்கு 2 லட்சம் ரூபாயும் இழப்பீடாக வழங்க வேண்டும். வழக்கு செலவாக, 10,000 ரூபாய் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
தேர்தலுக்கு இன்னும் 11 நாட்கள் தான்; அரசியல் கள பரபரப்பு செய்திகளுடன் இன்றைய தினமலர் தேர்தல் களம்!
-
அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சு தோல்வி
-
அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்