அ.தி.மு.க., ஆட்சியில் கஞ்சா புழக்கம் கட்டுப்படும் தி.நகர் வேட்பாளர் சத்யா உறுதி

தி.நகர்: தி.நகர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் தி.நகர் சத்யா, வடபழனி பகுதியில் நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அங்குள்ள உணவகத்தில் தொண்டர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டு கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க., ஆட்சியில் மக்கள் அவதிப்பட்டதற்கு ஆறுதலாக, அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 10,000 ரூபாய் வழங்கப்படும்.

தி.மு .க., ஆட்சியில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளது. எங்கள் ஆட்சியில், முதல்வர் பழனிசாமியின் மேற்பார்வையில், கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்தப்படும்.

தி.நகர் தொகுதியில் உள்ள துரைசாமி, மேட்லி மற்றும் ரங்கராஜபுரம் ஆகிய மூன்று சுரங்கப்பாதைகள் புதுப்பொலிவு பெறும். பாண்டி பஜார் 'ஸ்மார்ட்டி சிட்டி' திட்டம் சீர்குலைந்துள்ளது.

அதை மக்கள் பயன்படுத்தும்விதமாக மேம்படுத்தப்படும். அசோக் நகர், புதுார் பகுதி உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு கலை கல்லுாரி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.நகர் 141வது வார்டில் உள்ள மசூதியில், நேற்று முன்தினம் துண்டு பிரசுரம் வழங்கி, ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Advertisement