கீழக்கரை வடக்கு தெருவில் கழிவு நீரால் மக்கள் அவதி
கீழக்கரை: கீழக்கரை வடக்கு தெருவில் நான்கு நாட் களுக்கும் மேலாக கழிவுநீர் பம்பிங் ஸ்டேஷன் பழுதாகி இருப்பதால் நிரம்பி சாலையின் மையப்பகுதியில் குளம் போல் தேங்குகிறது. கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட வடக்கு தெருவில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.
இந்நிலையில் வடக்கு தெரு 1வது ரேஷன் கடை செல்லும் வழியில் கழிவு நீரை பம்பிங் ஸ்டேஷன் மூலமாக உறிஞ்சி அவற்றை குழாய்கள் மூலமாக கடத்துவது வழக்கம். பம்பிங் ஸ்டேஷன் மோட்டார் பழுதாகி நான்கு நாட்களுக்கு மேலாக உள்ளதால் அப்பகுதியில் வந்து சேரக்கூடிய கழிவுநீர் நிரம்பி வழிந்து தெரு முழுவதும் குளம் போல் தேங்குகிறது.
இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் உள்ளது. சுகாதாரக் கேடாக உள்ளதால் அப்பகுதி மக்கள் மூக்கை பிடித்தவாறு நடந்து செல்கின்றனர். எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
இறந்தவர்கள், சிறை சென்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி; ‛ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி