மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
மதுரை: மதுரையில், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் சார்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில், மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் கலந்து கொண்டு பேசியதாவது:
மதுரை மாநகராட்சியில் தி.மு.க.,வினர் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளனர். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தின் டி.பி.ஆர்., அறிக்கையை திருத்தி தருமாறு கேட்டதற்கு, அதை திருத்தம் செய்து அனுப்பாமல், மத்திய அரசு மறுப்பு தெரிவித்து விட்டதாக தி.மு.க.,வினர் பொய் செய்தி பரப்புகின்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணியிலும் நிலத்தை முழுமையாக கையகப்படுத்தி தரவில்லை. தமிழின் தொன்மைக்கும், கலாசாரத்திற்கும் மதிப்பளிக்காமல் இழிவுபடுத்திய உதயநிதி, எப்போதுமே முதல்வராக வரக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை ஏற்படுத்திய மோசமான சூழலை மறந்து விடக்கூடாது.
நிலம், மணல் மாபியாக்கள் தான் தமிழகத்தை ஆளுகின்றனர். தி.மு.க., அரசு வெளியேற வேண்டிய நேரம் வந்து விட்டது. இவ்வாறு பேசினார்.
மேட்ரோ திட்ட விரிவான அறிக்கை யாரால் தயாரிக்கப்பட்டது? இந்த மாதிரியான அறிக்கைகளுக்கு வழிகாட்டுதல்கள் இருக்கின்றன. அவைகளைக் கூட படிக்காமல் தயாரித்திருக்கின்றனர்.செல்லப்போகும் சாலைகளின் அகலம், நிலம் கையகப்படுத்தல் , எதிர்பார்க்கும் பயணிகள் பற்றிய சரியான கணிப்பு இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் ...இவைகளைப்பற்றிக் கவலைப்படாமல் ஒரு அறிக்கை. வெட்கமாக இல்லை? இதைத் திருத்தி அனுப்பவும் இன்று வரை முயற்சிக்கவில்லைமேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி