தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
நமது நிருபர்
திருச்சி மாவட்டம், மண்ணச்ச நல்லுார் தொகுதியில் தி.மு.க., சார்பில், சிட்டிங் எம்.எல்.ஏ., கதிரவன் போட்டியிடுகிறார். அவர் சோழங்கநல்லுார் கிராமத்தில் பிரசாரம் செய்தபோது, 'அங்குள்ள ஏரிக்கு தண்ணீர் கொண்டு வருவேன் என்று சொன்ன வாக்குறுதி என்னவானது' என்று இளைஞர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்து கதிரவன் எம்.எல்.ஏ., பேசியதாவது: புள்ளம்பாடி வாய்க்காலுக்கும், ஏரிக்கும் பதினோரு வேறுபாடு உள்ளது. அதை அதிகாரிகள் ஆய்வு செய்து உள்ளனர். திட்ட செலவு பெரிய தொகை என்பதால், அரசு அனுமதி இல்லாமல் செய்ய முடியாது.
தாலி கட்டிய உடனே எல்லாம் நடந்துறாது. மெதுவாகத்தான் நடக்கும். உன் இஷ்டத்துக்கு எல்லாம் என்னால செய்ய முடியாது. நீ எனக்கு ஓட்டே போட வேணாம். உன் ஓட்டும் தேவையில்லை. இவ்வாறு பேசினார்.
பேசிவிட்டு, பிரசார வேனை அங்கிருந்து கிளப்பிக் கொண்டு கதிரவன் எம்.எல்.ஏ., சென்று விட்டார். அவர் பேசும்போது, கேள்வி கேட்டவரை நீ, வா, போ என்று ஒருமையில் பேசியதும், தி.மு.க., பிரமுகர் ரவி என்பவரை, டேய் லுாசு என்று மைக்கில் பேசியதும், கிராம மக்களை முகம் சுளிக்க வைத்தது.
திருடர்களின் கூடாரம்
ஏரிக்கு தண்ணீர் கொண்டுவர 5 வருடம் போதாதாம்
உடலிலிருந்து வெளியேறும் கழிவு துர்வாசனை போல இருக்கின்றது திமுக எம் எல் ஏவின் பேச்சு
கிட்னி திருடனை ராஜ முழி முழிக்க சொன்னால் எப்படி முழிப்பார். சேறு என்றுமே சேறாகத்தான் இருக்கும்
நல்ல தமிழ் பேச சுட்டுப்போட்டாலும் வராது.
வோட்டை சாட்டையாக மக்கள் நினைப்பர்
திராவிட மாடல் அப்படித்தானே இருக்கும் .
திமுகவில் இருக்கும் அனைவரும் இப்படி தான்
தி மு க வழி தோன்றல் பின்ன எப்படி பேசுவார் ..
கருணாநிதி அண்ணா வழியில் அயராதுழைக்கிறார் கிட்னி கதிரவன்.மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு