ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை

@quote@ அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், எதையெல்லாம் செய்யப் போகின்றனரோ, அதைத்தான் பொதுச்செயலர் பழனிசாமி சொல்லி வருகிறார். ஆனால், தி.மு.க.,வினர் போலி வாக்குறுதிகள் கொடுத்து, மக்களை ஏமாற்ற பார்க்கின்றனர்.
த.வெ.க.,வின் ஆதவ் அர்ஜுனா பேசுவதை யாரும் கேட்கப் போவதில்லை. மக்களை சந்திக்காத விஜயை நோக்கி ஒரு கூட்டம் செல்கிறது. ஆந்திராவின் பிரபல நடிகர் சிரஞ்சீவிக்கு கூட கூட்டம் கூடியது. ஆனால், அந்தக் கூட்டம் ஓட்டாக மாறவில்லை. அதே நிலைதான் விஜய்க்கும் ஏற்படும்.

ஆதவ் அர்ஜுனா மலிவான அரசியல் செய்கிறார். விஜயும் அதை தவிர்க்க வேண்டும். முதல்வராக வர படிப்படியாக உழைக்க வேண்டும். ஜோசப் விஜய்க்கோ, உதயநிதிக்கோ முதல்வராகும் தகுதி இல்லை. இருவரையும் மக்கள் முதல்வராக ஏற்க மாட்டார்கள்.

- காயத்ரி ரகுராம், மகளிர் அணி துணை செயலர், அ.தி.மு.க.,
quote

Advertisement