தனுஷ்கோடி டூ இலங்கை; இலங்கை டூ தனுஷ்கோடி ஹரியானா இளம் பெண் இன்று நீந்துகிறார்
ராமேஸ்வரம்: ஹரியானா நீச்சல் வீராங்கனை காம்யா பரத்வாஜ் இன்று (ஏப்.,12) தனுஷ்கோடி டூ இலங்கைக்கும் பின் இலங்கையில் இருந்து தனுஷ் கோடிக்கும் 56 கி.மீ., கடலில் நீந்தி கடக்க உள்ளார்.
ஏப்., மே வரை கோடை காலத்தில் பாக்ஜலசந்தி கடலில் அதிக நீரோட்டம் இருக்கும். இந்த சீசனில் நீச்சல் வீரர்கள், வீராங்கனைகள் பலரும் இலங்கை டூ தனுஷ்கோடி கடலில் நீந்தி கடந்து சாதனை படைப்பார்கள்.
இந்நிலையில் தேசிய அளவில் நீச்சல் போட்டிகளில் சாதனை செய்த ஹரியானா குருகிராம் பகுதியை சேர்ந்த காம்யா பரத்வாஜ் 20, இன்று காலை தனுஷ்கோடி அரிச்சல்முனையில் இருந்து கடலில் குதித்து நீந்தி இலங்கை தலைமன்னார் செல்கிறார்.
சில மணி நேரங்களில் (மறுநாள் ஏப்.,13) மீண்டும் இலங்கையில் இருந்து நீந்தி அதிகாலை தனுஷ்கோடி வர உள்ளார். நீச்சல் வீராங்கனையான இவரக இரு மார்க்கத்திலும் 56 கி.மீ., நீந்தி கடக்க இருக்கிறார்.
மேலும்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
இறந்தவர்கள், சிறை சென்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி; ‛ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி