சிக்கல் தனி ஒன்றியமாக நடவடிக்கை எடுப்பேன்
முதுகுளத்துார்: சிக்கல் தனி ஒன்றியமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதுகுளத்துார் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் மலேசியா பாண்டி பேசினார்.
சாயல்குடி கிழக்கு ஒன்றியம் இதம்பாடல், சிக்கல், சிறைகுளம், காமராஜபுரம், குசவன்குளம், மேலகிடாரம், காவாகுளம், கீழக்கிடாரம், வாலிநோக்கம், கீழமுந்தல், மாரியூர், கிருஷ்ணாபுரம், கமுதி மேற்கு ஒன்றியம் சீமனேந்தல், பூமாவிலகை, வேப்பங்குளம், குண்டுகுளம், வீரமச்சான்பட்டி, பம்மனேந்தல், கரிசல்குளம், திம்மாபுரம், முத்துசெல்லையாபுரம், காடமங்கலம் உள்ளிட்ட அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மலேசியா பாண்டி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவருடன் தொகுதி பொறுப்பாளர்கள் எம்.பி., தர்மர், நாகேந்திர சேதுபதி, அ.தி.மு.க., மாநில விவசாய அணி துணைச்செயலாளர் சண்முக பாண்டியன், சாயல்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரவின்குமார், பா.ஜ., மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமசாமி உட்பட தே.ஜ., கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வேட்பாளர் மலேசியா பாண்டி பேசியதாவது:
முன்னாள் முதல்வர் ஜெ., 110 விதியின் கீழ் சிக்கல் தனி ஒன்றியமாக அறிவிக்கப்படும் என்று சட்டசபையில் அறிவித்த நிலையில் அதற்கு பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசு கிடப்பில் விட்டுள்ளனர்.
மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைந்தவுடன் சிக்கல் தனி ஒன்றியமாக அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.
வாலிநோக்கத்தில் மீன்பிடி துறைமுகம், சிப்காட், கீழமுந்தலில் மீன் பதப்படுத்தும் கூடம் அமைக்கப்படும்.
நல்லதண்ணீர் தீவிற்கு படகு சுற்றுலா வசதி ஏற்படுத்தப்படும்.
சிக்கலில் ஒருங்கிணைந்த புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்படும். கிராமங்களில் குடிநீர், பஸ் வசதி, ரோடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார்.
மேலும்
-
அமைச்சர்கள் மட்டுமல்ல; மனைவியரும் கோடீஸ்வரர்கள்
-
தலைமைச் செயலாளர் மாற்றம்; டில்லியில் நடந்தது என்ன?
-
பெட்ரோலில் இயங்கும் வாகனங்களுக்கு வருகிறது டில்லியில் தடை
-
நம்ம பள்ளி...நம்ம வாத்தியார்... 600 பேப்பர். - நுாற்றாண்டு கடந்த பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி சாதனை மாணவர்களை உருவாக்கி அசத்தல்
-
தொகுதி வாரியாக 'பூத் சிலிப்' அனுப்பி வைப்பு இன்று காலை முதல் வழங்கும் பணி துவக்கம்
-
நண்பனுக்கு மிரட்டல் சகோதரர்களுக்கு 'காப்பு'