ஆட்டு வியாபாரியிடம் ரூ. 69,400 பறிமுதல்
உடுமலை: மடத்துக்குளம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் நடத்திய வாகன சோதனையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வந்த, 69,400 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
மடத்துக்குளம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், உடுமலை முக்கோணம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் உரிய ஆவணங்கள் இல்லாமல், நரிக்கல்பட்டி சந்தைக்கு ஆடு வாங்க சென்ற, மஞ்சநாயக்கனுாரை சேர்ந்த ஆட்டு வியாபாரி ஜெயபிரகாஷிடம் இருந்து, 69,400 ரூபாயை பறிமுதல் செய்து, மடத்துக்குளம் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.
முறையான ஆவணங்களை சமர்ப்பித்து, பணத்தை பெற்றுக்கொள்ளலாம் என, தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement