'விளக்குமாற்றால் அடியுங்கள்': பதறிய சீனிவாசன்
திண்டுக்கல் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் சீனிவாசன், வடக்கு ரெங்கநாதபுரம் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அ.தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி, தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை நினைவூட்டி பேசினார்.
அப்போது கிளை செயலர் பாண்டி பேசுகையில், “அண்ணன் சீனிவாசன் கூறிய அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றி தரப்படும். நிறைவேற்றவில்லை என்றால் எங்களை விளக்குமாறை கொண்டு அடித்து கேட்கலாம்,” என்றார்.
இதை கேட்டு பதறிய சீனிவாசன், “ஏம்ப்பா இப்படி எல்லாம் பேசுற. இது நமக்கு தேவையா. சொன்னதை தான் செய்வோம்; செய்வதை தானே சொல்வோம். அப்புறம் எதுக்கு இப்படி தேவையில்லாம பேசி வாய கொடுத்து வம்புல மாட்டி விடுற,” என சத்தமாக கேட்டார். அவர் பேசியது மைக்கில் விழுந்ததால், அதைக்கேட்ட மக்களிடம் சிரிப்பலை பரவியது.
வாசகர் கருத்து (1)
Munna - ,
16 ஏப்,2026 - 21:43 Report Abuse
ஹா ஹா .. 0
0
Reply
மேலும்
-
சாக்லேட் கொடுத்து வாக்காளர்களை வரவேற்ற ரோபோ; தமிழக தேர்தல் ஸ்பெஷல்
-
தமிழகத்தில் வெயில் 3 டிகிரி அதிகரிக்கும்
-
ஓட்டு இயந்திரம் பழுது; துவங்கிய சில நிமிடங்களிலேயே ஓட்டுப்பதிவு நிறுத்தம்
-
மதுரையில் 7 பேர் கொல்லப்பட்ட வழக்கு 9 பேருக்கு சாகும் வரை சிறை தண்டனை
-
நகை கடைகளுக்கு இன்று விடுமுறை
-
கஞ்சா கடத்தல் முக்கிய குற்றவாளி ஆறு ஆண்டுகளுக்கு பின் கைது
Advertisement
Advertisement