ப்ளீஸ் ஒரே ஒருமுறை; கெஞ்சும் த.வெ.க.,வினர்

சட்டசபை தேர்தலில், நடிகர் விஜயின் த.வெ.க., 233 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது. இக்கட்சி வேட்பாளர்களில், பெரும்பாலானோர் புதுமுகம் என்பதால், புதுமையான முறையில் பிரசாரம் செய்கின்றனர்.

சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் செல்வம், பார்த்தசாரதி கோவிலை சுற்றியுள்ள தெருக்களில், நேற்று ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, அவரும், அவருடன் வந்த கட்சி தொண்டர்களும், வாக்காளர்களை பார்த்து, கை கூப்பி வணக்கம் தெரிவித்து, 'நாங்க புதுமுகம், ப்ளீஸ்... ஒரே ஒருமுறை எங்களுக்கு வாய்ப்பு தாங்க' என்று கெஞ்சி ஓட்டு கேட்டனர்.

அவர்கள், கெஞ்சி கேட்பதை பார்த்து, வாக்காளர்களும் வணக்கம் தெரிவித்தபடி சென்றனர். இதேபோல், பெரும்பாலான தொகுதிகளில் த.வெ.க., வேட்பாளர்கள், 'ஒரே ஒருமுறை வாய்ப்பு தாங்க' என, வாக்காளர்களிடம் கெஞ்சி ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement