வறட்சியால் காயும் பயிர் விவசாயிகள் வேதனை
அரூர், தர்மபுரி மாவட்டத்தில், அரூர், மொரப்பூர், கம்பைநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு, நெல், மரவள்ளிக்கிழங்கு, உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. தற்போது, வறட்சி
யால் பயிர்கள் காய்ந்து வருவதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது: அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் பகுதியில், கடந்தாண்டு, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதியளவில் பெய்யாததால் வறட்சி நிலவி வருகிறது. மேலும், தடுப்பணைகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வறண்டு போனதுடன், நிலத்தடி நீர்மட்டமும் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. மானாவாரியாகவும், இறவை பாசனம் மூலமும் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு, பாக்கு, வாழை, தக்காளி, மரவள்ளிக்
கிழங்கு உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருகின்றன. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால் வேதனை அடைந்துள்ளனர். மேலும், சிறிதளவு வளர்ந்த நிலையிலுள்ள சோளம் பயிர்கள் கருகி வருவதால், கால்நடைகளுக்கு, பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி