பள்ளி மாணவருக்கு விளையாட்டு உபகரணம்
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு தேர்வாகி, அதற்கான பயிற்சிகளை சிக்கண்ணா அரசு கல்லுாரியில் உள்ள மாவட்ட விளையாட்டு தடகள பயிற்சி மைதானத்தில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
பயிற்சி பெற்று வரும் வீரர், வீராங்கனைகளுக்கு திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு சார்பில், தேவையான காலணிகள், யோகா விரிப்பு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதில், அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement