மனைவியை தற்கொலைக்கு துாண்டிய கணவனுக்கு '5 ஆண்டு'
தர்மபுரி,
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, பெரியூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பிரபாகரன், 34. இவரின் மனைவி முத்துலட்சுமி, 24. தம்பதிக்கு கடந்த, 2015ல் திருமணமானது. பிரபாகரன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளார்.
கடந்த, 2019 ஆக., 1ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டபோது, விரக்தியடைந்த முத்துலட்சுமி, தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில், பலத்த காயமடைந்த அவர் உயிரிழந்தார். இதில், வரதட்சணை கேட்டு மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக பிரபாகரன் மீது, பாப்பாரப்பட்டி போலீசார்
வழக்குப்பதிந்தனர்.
இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இரு தரப்பு விசாரணை முடிவடைந்த நிலையில், பிரபாகரன் மீதான குற்றச்சாட்டு உறுதியானதை அடுத்து அவருக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும், 6,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ஜீவநந்தினி தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் நந்திவர்மன் ஆஜரானார்.
மேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி