நிப்டி 24,000 புள்ளிகளை தாண்டியது 10 லட்சம் கோடி ரூபாய் லாபம்

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து, இந்திய பங்கு சந்தைகள், நேற்று கணிசமான உயர்வை சந்தித்தன. கடந்த திங்கட்கிழமை சரிவை கண்டிருந்த சந்தையில், நேற்று காளையின் ஆதிக்கம் மேலோங்கியதால், முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு 9.41 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்ந்தது. ஒரு நாள் சரிவு, ஒரு நாள் ஏற்றம் என்ற வகையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் குறுகியகால அடிப்படையில் பங்குகளை வாங்கி விற்க ஏற்றதாக, சமீப நாட்களாக பங்கு சந்தைகளின் போக்கு அமைந்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 1,263 புள்ளிகள் உயர்ந்து 78,111 என்ற அளவிலும், நிப்டி 388 புள்ளிகள் அதிகரித்து 24,231 என்ற அளவிலும் நிலைபெற்றன.

ஏற்றத்துக்கான காரணங்கள்

Tamil News
* ஈரானுடன் பேச்சு துவங்க வாய்ப்புள்ளதாக டிரம்ப் தெரிவித்திருப்பது

* பிரென்ட் கச்சா எண்ணெய் விலை 100 டாலருக்கு கீழ் சென்றது

* ஆசிய, அமெரிக்க சந்தைகள் ஏற்றத்துடன் காணப்பட்டது

* சந்தை அபாயத்தை குறிக்கும் இந்தியா வி.ஐ.எக்ஸ்., குறியீடு 10 சதவீதம் சரிந்தது

* அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ஏற்றம் கண்டது

பங்குகளின் நிலை:

உயர்ந்த பங்குகள்: 3,585

சரிந்த பங்குகள்: 802

மாற்றமில்லாதவை: 126

சிறப்பாக செயல்பட்ட துறைகள்:

துறை உயர்வு(%)

சேவைகள் 3.30%

தொழில் துறை 2.90%

மின்சாரம் 2.87%

நுகர்வோர் சாதனங்கள் 2.84%

ஐ.டி., 2.78%

மூலதன பொருட்கள் 2.54%

Advertisement