கள்ளக்குறிச்சி நகரில் அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி ஓட்டு சேகரிப்பு 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ராஜிவ்காந்தி, நேற்று கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட சுந்தர விநாயகர் கோவில் தெரு, கவரை தெரு, கடை வீதி, வ.உ.சி.,நகர், ராஜா வீதி, பசுங்காயமங்கலம் ரோடு, விளாந்தாங்கல் ரோடு உட்பட பல்வேறு இடங்களில் வீதி வீதியாக சென்று ஓட்டு சேகரித்தார்.

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் அ.தி.மு.க., தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி வேட்பாளர் ராஜிவ்காந்தி பேசியதாவது; அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும் குடும்ப தலைவிக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை மற்றும் ஒராண்டுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். தேசிய ஊரக வேலை திட்டத்தில் 150 நாட்களாக வேலைவாய்ப்பு உயர்த்தபடும். அம்மா இல்ல திட்டம் மூலம் வீடுகள் என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்படவுள்ளது என கூறினார்.

இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பிரபு, ஜெ., பேரவை செயலாளர் ஞானவேல், முன்னாள் நகர சேர்மன்கள் பாலகிருஷ்ணன், ரங்கன், வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், எம்.ஜி.ஆர்.,மன்ற செயலாளர் தங்கபாண்டியன், பாசறை செயலாளர் வினோத், நகர கவுன்சிலர்கள் முருகன், குட்டி, பா.ஜ., மாவட்ட பொருளாளர் ஸ்ரீசந்த், நிர்வாகி ராஜேஷ், பா.ம.க., சீனுவாசன், அ.ம.மு.க., ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேறற்னர்.

Advertisement