ராணுவ பணிக்கான தேர்வு 3 மையங்களில் 404 பேர் எழுதினர்
புதுச்சேரி: ராணுவ பணிக்கான தேர்வை புதுச்சேரியில் 3 மையங்களில் 404 பேர் எழுதினர்.
தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமி மற்றும் ஒருங்கிணைந்த ராணுவ சேவைகளுக்கான தேர்வுகளை நடத்த புதுச்சேரியை ஒரு மையமாக மத்திய பணியாளர் தேர்வாணையம் தேர்ந்தெடுத்துள்ளது. புதுச்சேரி ஒருங்கிணைந்த ராணுவ சேவைக்கான தேர்வு, கருவடிக்குப்பம் பாத்திமா மேல்நிலைப்பள்ளியில், 3 பிரிவுகளில் தேர்வு நடந்தது. இதில் விண்ணப்பித்திருந்த 140 தேர்வர்களில் 72 பேர் பங்கேற்றனர். 68 பேர் 'ஆப்சென்ட்'.
பாரதிதாசன் மகளிர் கல்லுாரி மற்றும் லாஸ்பேட்டை வள்ளலார் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில், தேசிய ராணுவ அகாடமி, கடற்படை அகாடமிக்கான ஆகிய 2 பிரிவுகளில் நடந்த தேர்வுக்கு 472 பேர் விண்ணப்பித்திருந்தனர். அதில், 332 பேர் பங்கேற்றனர். 140 பேர் 'ஆப்சென்ட்'. இத்தேர்வை எழுத மொத்தம் 612 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், 404 பேர் மட்டுமே எழுதினர். 208 பேர் ஆப்சென்ட்.
தேர்வு மையத்தை, தேர்வு ஒருங்கிணைப்பாளர் சுமிதா, உதவி தேர்வு ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார், பணியாளர் சீர்திருத்தத்துறை சார்பு செயலர் அதிகாரி முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டனர். தேர்வர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்து, ஹால்டிக்கெட் மற்றும் அடையாள அட்டையை சரிபார்த்து தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், மொபைல் போன், ஸ்மார்ட் வாட்ச், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் எடுத்த செல்ல தடைவிதிக்கப்பட்டது. தேர்வுவர்கள் வசதிக்காக, புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து தேர்வு மையங்களுக்கு இலவச பஸ் வசதியை புதுச்சேரி அரசு ஏற்பாடு செய்திருந்தது.
மேலும்
-
அறிவிப்புக்கு முன் தண்ணீர் நிறுத்தம் விவசாயிகள் போராட்டம் அறிவிப்பு
-
உளுந்துார்பேட்டை தொகுதியில் 13,699 பூத் சிலிப் வழங்கல்
-
வழக்கமான பணிக்கு திரும்பிய போலீசார்
-
நுாறு அடி சாலையில் வாய்க்கால் சிலாப் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
-
காளான் வளர்ப்பு குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
-
தந்தை மாயம் மகன் புகார்