வருத்தம் இருந்தாலும் கூட்டணி கட்சிகளை ஆதரித்து நிற்க வேண்டிய நேரம் இது காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேச்சு
விருதுநகர்: எவ்வளவு வருத்தங்கள் இருந்தாலும் அவற்றை தள்ளி வைத்து தி.மு.க., கூட்டணி கட்சிகளை முழு மனதுடன் ஆதரித்து நிற்க வேண்டிய நேரத்தில் உள்ளோம், என காங்., எம்.பி., மாணிக்கம் தாகூர் பேசினார்.
விருதுநகரில் தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு அளிப்பதற்கான காங்., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: காங்., கட்சியினர் 5 ஆண்டுகளாக நடத்தப்பட்ட விதத்தால் மனதளவில் வருத்தங்கள் உள்ளன.
இவை ஒரு பக்கம் இருந்தாலும் காங்., தலைமையின் முடிவுக்கு கட்டுப்பட்டு கூட்டணியில் உள்ள பஞ்சாயத்துக்கள், வேதனைகளை தள்ளிவைக்க முடிவெடுத்தோம். வருத்தங்களை தள்ளி வைத்துவிட்டு தி.மு.க., கூட்டணி கட்சிகளை முழு மனதுடன் ஆதரித்து நிற்க வேண்டிய நேரத்தில் உள்ளோம். தே.மு.தி.க., வேட்பாளர் விஜயபிரபாகரனின் வெற்றிக்காக காங்., நிர்வாகிகள் உழைக்க வேண்டும்.
இதை விஜயகாந்த் மகனுக்கு கிடைக்கும் வெற்றியாக பார்க்காமல் காங்., பாரம்பரியத்தை சேர்ந்த அழகர்சாமியின் பேரனுக்கு கிடைக்கும் வெற்றியாக பார்க்க வேண்டும்.
காங்., தன்மானத்தை யார் அவமதித்தாலும் தட்டி கேட்பேன். மரியாதை கிடைத்தால் அதை இரு மடங்காக அள்ளி கொடுப்பவர்கள் காங்., கட்சியினர், என்றார்.
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!