தனியார் வங்கி ஊழியரை வெட்டியவருக்கு வலை
செய்யாறு: செய்யாறு அருகே, தனியார் வங்கி ஊழியரை கத்தியால் வெட்டிய வாலிபரை, போலீசார் தேடுகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், பல்லிமேட்டை சேர்ந்தவர் பிரதீப், 26; செய்யாறில் தனியார் வங்கி ஊழியர். கடன் பெற்றவர்களிடம் தவணை பணம் வசூலிக்கும் பணி செய்கிறார்.
நாட்டேரியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 29. இவர், பிரதீப் பணியாற்றும் வங்கியில், 8 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இதற்காக மாதம், 8,000 ரூபாய் தவணை பணம் செலுத்தினார். மூன்று மாதங்களாக தவணை பணம் செலுத்தவில்லை.
நேற்று முன்தினம், சுப்பிரமணி வீட்டிற்கு சென்ற பிரதீப், தவணை பணம் கட்டும்படி கேட்டார். ஆத்திரமடைந்த சுப்பிரமணி, பிரதீப்பை ஆபாசமாக பேசி, கழுத்தில் கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தார்.
படுகாயமடைந்த பிரதீப்பை அங்கிருந்தவர்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பிரம்மதேசம் போலீசார் வழக்கு பதிந்து, சுப்பிரமணியை தேடுகின்றனர்.
மேலும்
-
சதமடிக்கும் வெயில் மக்கள் பாதிப்பு
-
அவுட் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க வலியுறுத்தல்
-
தி.மு.க.,வுக்கு பெண்கள் அமோக ஆதரவு: வால்பாறை தி.மு.க., வேட்பாளர் பெருமிதம்
-
பொரியல் தட்டை விலை உயர்வு
-
பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
-
மீண்டும் பஸ்கள் இயக்கக் கோரி துடியலுார் ஆர்.டி.ஓ., முற்றுகை