பொது சிவில் சட்டம் குறித்து இபிஎஸ் கருத்து என்ன? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
பரமக்குடி: பொது சிவில் சட்டம் குறித்து இபிஎஸின் கருத்து என்ன? அவர் கருத்து சொல்வாரா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
பாடம்
பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இபிஎஸ், இறந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். அடுத்தவர் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது அவரின் கடமையாக இருக்கிறது. வாய்க்கொழுப்பு எடுத்து சாக்கடைக்கு சரிசமமாக வரும் வார்த்தைகளுக்கு பாடம் புகட்டும் நாள் ஏப்.23.
கொள்கையற்ற அடிமை கூட்டத்தை சுயநலத்துக்காக தமிழகத்துக்காக அடகு வைக்கும் துரோக கூட்டத்தை நீங்கள் விரட்டியடிக்க வேண்டும். சாதனைகளால் தமிழகத்தை உயர்த்திய திராவிட மாடல் அரசை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும். ஏனெனில் திராவிட மாடல் அரசு என்பது வரலாற்றில் நிற்கும் திட்டம் அல்ல. புது வரலாற்றை படைக்கக்கூடிய திட்டங்கள்.
வெறும் புள்ளி விவரங்களில் மட்டுமல்ல கோடிக்கணக்கான தமிழ் மக்களின் புன்னகையால் எழுதப்பட்ட சாதனை சரித்திரம் தான் திராவிட மாடல். சொன்னதை உறுதியாக செய்வேன். சொல்லாததை அதிரடியாக செய்வேன். அதனால் தான் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்ற நிலையை மாற்றி, தெற்கு வழிகாட்டுகிறது என்ற நிலையை உருவாக்கி உள்ளோம்.
முயற்சி
அப்படி வழிகாட்டக்கூடிய தெற்கை வஞ்சிக்கிற செயலில் மத்திய பாஜ அரசு இறங்கி உள்ளது. மகளிர் இட ஒதுக்கீட்டை காட்டி, மத்தியில் தமிழக பிரதிநிதித்துவத்தை குறைக்க முயற்சி நடக்கிறது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு துணை நின்ற தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களை தண்டிக்க பார்க்கின்றனர். இதனை எதிர்க்கப் போகிறோம். இந்த அநியாயத்தை எதிர்க்கும் கேள்வி கேட்கும் துணிச்சல் இபிஎஸ்க்கு இருக்கிறதா? மற்றவற்றுக்கு வாய் கிழிய பேசும் இபிஎஸ், பாஜ அட்டூழியங்களை எதிர்க்க சொன்னால் சைலன்ட் மோடுக்கு போய் விடுகிறார்.
கின்னஸ் சாதனை
மோடி, அமித்ஷாவை எதிர்த்து பேசுவது என்றால் பயத்தில் சுவிட்ச் ஆப் ஆகிவிடுகிறார். அவர் எதற்கு பிரசாரம் செய்கிறார் என்றால், இப்படிப்பட்ட அடிமை உலகத்தில் யாரும் பார்த்தது இல்லை என்ற கின்னஸ் சாதனை படைக்க பிரசாரம் செய்கிறார். அவரின் ஓனர் பாஜ.
பாஜவுக்கு தமிழகம் மீது வரும் அரசியல் அக்கறை என்பது அரசியல் ஸ்டன்ட் மட்டும் தான். அவர்கள் செய்வது ராஜதந்திரம் அல்ல. இரட்டை தந்திரம்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் அறிக்கை வெளியிட்ட பாஜ, பொது சிவில் சட்டத்தை கொண்டு வருவோம் எனக்கூறியுள்ளது. நமது பன்முகத்தன்மைக்கு விடப்பட்டுள்ள நேரடியான சவால். மேற்கு வங்கத்தில் விடப்பட்டுள்ள சவால், தமிழகத்தில் விட முடியவில்லை. ஏனென்றால், தமிழகத்தை பாதுகாப்பது திராவிட பெருஞ்சுவர். இந்த தமிழ் கோட்டையை சமத்துவத்துக்கு எதிரான மதவாத கும்பல் ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டோம். இதனால், தான் நமது கையை எடுத்து நமது கண்ணை குத்த அதிமுகவை தேர்வு செய்துள்ளனர்.
கத்தி
பாஜவை அழைத்து வருவதற்கான பல்லக்கு தூக்கியாக மாறியுள்ளவர் தான் இபிஎஸ். தமிழகத்துக்கு வரும் பாஜ அமைச்சர்கள், நட்சத்திர பேச்சாளர்கள், தமிழகம் மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என பேசுகின்றனர். இதனை இபிஎஸ் கண்டித்துள்ளாரா? தொகுதி மறுசீரமைப்பு திட்டம் தலைக்கு மேல் கத்தியாக தொங்கி கொண்டுள்ளது. இதனை கண்டித்து ஒரு வார்த்தையாவது இபிஎஸ் பேசி உள்ளாரா? பொது சிவில் சட்டம் குறித்தஇபிஎஸ் நிலைப்பாடு என்ன?இது குறித்து கருத்து சொல்வாரா?
காலில் விழுந்து காலை வாரிவிட்ட இபிஎஸ், சொந்த மக்களுக்கு துரோகம் செய்கிறார். இதுதான் இபிஎஸ் செய்த பச்சைத்துரோகம். அவர் தமிழகத்தை ஆட்சி செய்த காலம் என்பது ஊழல்களும் மற்றும் மக்கள் விரோத நடவடிக்கைகளும் இருண்ட ஆட்சி காலம்.
உரிமைகள்
பொள்ளாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி. துப்பு கெட்ட ஆட்சிக்கு தூத்துக்குடியே சாட்சி. கொடூரமான ஆட்சிக்கு கொடநாடே சாட்சி. கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளமே சாட்சி. அனைத்துமே எதிர்மறையாக தான் இருக்கிறது. தவறுக்கு மேல் தவறு செய்தஇபிஎஸ், தனது தவறுகளில் இருந்து தப்பிக்க சரண் அடைந்த இடம் தான் பாஜவின் வாஷிங்மிஷின். அவர் தவறுகளில் இருந்து தப்பிக்க விட்டுக் கொடுத்தது தான் தமிழகத்தின் உரிமைகள். தனிமனிதனை விட தமிழகம் தான் பெரியது. தமிழகத்தை வட்டமிடும் பருந்தை விரட்டியடிக்க வேண்டும்.
அதனால் தான் தமிழகம் வெர்சஸ் டில்லி என சொல்கிறேன். பத்து தோல்வி இபிஎஸ்க்கு 11வது தோல்வியை கொடுத்து விரட்ட வேண்டும்.டபுள் இன்ஜின், டப்பா இன்ஜினுக்கு அடிமைகள் தமிழகத்தை ஆட்சி செய்யக்கூடாது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது தமிழகம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
பொது சிவில் சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா... வேண்டாம் விட்டுடுங்க.....
கண்டிப்பாக தமிழகத்தில் பொது சிவில் சட்டம் வரும்.
முஸ்லீம் மக்கள் ஓட்டை தான் குத்தகைக்கு எடுத்து விட்டீர்களே பிறகு எதற்கு இந்த வேண்டாத கேள்வி
பல்லாண்டுகள் காங்கிரசு ஆட்சியிலிருந்த களத்திலிருந்து கோவாவில் பொது சிவில் சட்டம் மட்டுமே அமலிலுள்ளது. ஒரு எதிர்ப்புமில்லை. கிறிஸ்தவ மேற்கத்திய நாடுகள் எல்லாவற்றிலும் பொது சிவில் சட்டம்தான் உள்ளது. இதெல்லாம் உங்களால் புரிஞ்சுக்க முடியாத விஷயம்.
நீ பேசுவது ஒன்றுமே புரியவில்லையே எங்களுக்கு புரியும்படி பேசினால்தான் நாங்கள் வாக்கு அளிப்போம் உனது அப்பனைப்போன்றே நீயும் என்னன்னெமோ பேசுகிறாய் இந்த அடுக்கு மொழி கதை, கட்டுரைகள் எல்லாம் எங்களுக்கு இpப்போது ஒன்றுமே தேவை இல்லை மக்களுக்கு என்ன செய்வாய் இன்று வரையில் என்ன செய்தாய் அவைகளை மட்டும் சொன்னாலே போதுமய்யா
இவரின் பேச்சு உள்நோக்கம் கொண்டது. பொது சிவில் சட்டத்தை ஆதரிக்கிறேன் என்று EPS சொன்னால் தமக்கு minority மதங்களை சேர்ந்தவர்கள் வாக்குகள் கிடைக்கும் என திமுக தலைவர் நினைக்கிறார் அதுதான் உண்மையும் கூட. Minority மக்களை ஒருவித பயத்திலேயே வைத்திருப்பதுதான் திமுகவின் செயல் திட்டம்.
பொது சிவில் சட்டம் வந்தால் இவர்களுக்கு என்ன பிரச்சினை. ஆக மதத்தை வைத்து இவர் தான் அரசியல் செய்கிறார். தேர்தல் வந்தால் பொய் மட்டுமே பேசி ஓட்டு வாங்கும் தலைவர் இவர். எடுத்துக்காட்டாக நீட் தேர்வு ரத்து பற்றி போன தேர்தல்ல பேசியது. மத்திய அரசின் கீழ் வரும் சில விசயங்களை மாநில அரசால் எதுவும் செய்ய முடியாது. ஆனாலும் மக்களை ஏமாற்ற எது வேண்டுமானாலும் இவர் சொல்வார். இவருக்கு ஓட்டு போட்டால் மறுபடியும் மாநில அரசும் மத்திய அரசும் முட்டிக் கொண்டு தமிழக மக்கள் தான் அவஸ்தை பட வேண்டும்
இதற்கு மட்டுமல்ல, இன்னும் உங்களது நிறையக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களை நேருக்கு நேர் விவாதிக்க எடப்பாடி அழைத்துக் கொண்டே இருக்கிறார். நீங்கள் போட்டியிடும் குளத்தூருக்கு கூட நீங்கள் நேரம், காலம் ,இடம் குறிப்பிட்டால் வருகிறேன் என்கிறார். தெம்பா எல்லாக் கேள்விகளையும் நேர்ல கேளுங்க. எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைக்கும். பதிலை நாங்களும் தெரிஞ்சிக்கிறோம்.
இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லுவதை பற்றி முத்துவேல் கருணாநிதியின் குடும்பத்தின் கருத்து என்ன ?
சட்டம் அனைவருக்கும் சமம் இதை ஸ்க்டாலின் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை தெளிவு படுத்தனும். ஆளாளுக்கு ஒரு சட்டம் என்பதே பிரிவினையை ஏற்படுத்தும்மேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி