பெண்ணாடத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்முருகுமாறன் ஓட்டு சேகரிப்பு
பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், அக்கட்சியின் வாக்குறுதிகளை கூறி, வார்டு மக்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திட்டக்குடி (தனி) சட்டசபை தொகுதிக்குட்பட்ட பெண்ணாடம் பேரூராட்சியில் அ.தி.மு.க., வேட்பாளர் முருகுமாறன், பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஓட்டு, சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வார்டு மக்கள் மாலை அணிவித்து, மலர் துாவி வரவேற்றனர்.
அப்போது, பேரூராட்சி வார்டுகளிலில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும் எனக்கூறி, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பயனளிக்கும் வகையில் பல நல்ல திட்டங்கள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, வா்ரடு மக்களிடம் ஓட்டு சேகரித்தார்.
நகர செயலாளர் மதியழகன், பா.ஜ., மாவட்டத் தலைவர் தமிழ் அழகன், பா.ஜ., செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், பா.ம.க., பரமசிவம், த.மா.கா., பொது செயலாளர் இளையகுமார், அ.ம.மு.க., அய்யப்பன், அண்ணா தொழிற்சங்கம் கோபி, நகர அவை தலைவர் கணேசன், இணை செயலாளர் சிவரஞ்சனி, பொருளாளர் ராஜ்குமார், பேரூராட்சி கவுன்சிலர் சக்திவேல், மண்டல பொறுப்பாளர் சேகர், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு கலையரசன், கவிசங்கர், ரமேஷ் உடனிருந்தனர்.
மேலும்
-
சட்டத்தின் பிடியில் இருந்து அசாம் முதல்வர் தப்ப முடியாது: ராகுல்
-
வருமான வரித்துறை ரூ.1.50 கோடி அபராதம்: விஜய் மேல்முறையீடு
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி