தந்தை மாயம் மகன் புகார்

புதுச்சேரி: வீட்டில் இருந்து வெளியில் சென்ற தந்தையை காணவில்லை என, மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

லாஸ்பேட்டை சாந்தி நகர், பாண்டியன் தெருவை சேர்ந்த கந்தசாமி, 65. இவர் கடந்த 8ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்றார். இரவு வரை வீடு திரும்பாததால், சந்தேகமடைந்த குடும்பத்தினர், உறவினர் வீடு உட்பட பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

இதுகுறித்து, அவரது மகன் யுவராஜ் கொடுத்த புகாரின் பேரில், லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement