நுாறு அடி சாலையில் வாய்க்கால் சிலாப் சேதம்; போக்குவரத்து பாதிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி நுாறு அடி சாலை, அண்ணா நகர் விரிவு இணைப்பு சாலையில் வாய்க்கால் சிலாப் உடைந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
நகரின் பிரதான போக்குவரத்து சாலையான, நுாறு அடி சாலையில் இருந்து அண்ணா நகர் விரிவு பகுதிக்கு செல்லும் இணைப்புச் சாலை எப்போதும் பரபரப்பாகக் காணப்படும். இந்தச் சாலையின் குறுக்கே செல்லும் வாய்க்காலின் கான்கிரீட் சிலாப் திடீரென உடைந்து, சாலையின் நடுவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது.
அவ்வழியே செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் திடீரென பள்ளத்தைக் கண்டு பிரேக் பிடிப்பதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக பள்ளத்தின் அருகில் இரும்பு பேரிகார்டு வைத்துள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் இந்தச் சாலையில் சிலாப் உடைந்து, கார் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்கள் இந்தப் பாதையில் நுழைய முடியாமல் பாதியிலேயே திரும்பிச் செல்வதால், நுாறு அடி சாலை மற்றும் அருகில் உள்ள குறுக்குச் சாலைகளில் நெரிசல் ஏற்படுகிறது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இணைப்பு சாலையை சீரமைக்க பொதுப்பணித்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு