உளுந்துார்பேட்டை தொகுதியில் 13,699 பூத் சிலிப் வழங்கல்

கள்ளக்குறிச்சி: உளுந்துார்பேட்டை சட்டசபை தொகுதியில் ஒரே நாளில் 13 ஆயிரத்து 699 பேர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளுக்குட்பட்ட 11 லட்சதது 9 ஆயிரத்து 911 வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் வழங்கும் பணியை நேற்று முன்தினம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை ஆகிய தொகுதி வாரியாக வாக்கார்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டு வருகிறது. 375 ஓட்டுப்பதிவு மையங்களையும், 3 லட்சத்து 699 வாக்காளர்களை கொண்ட உளுந்துார்பேட்டை தொகுதியில் நேற்று ஒரே நாளில் 13 ஆயிரத்து 926 பேர்களுக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டது. தொடர்ந்து மற்ற 3 சட்டசபை தொகுதிகளிலும் பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

Advertisement