ஹார்முஸ் ஜலசந்தி வழியாக எந்த கப்பலையும் அனுமதிக்க மாட்டோம்: டிரம்ப்
வாஷிங்டன்: எல்லா கப்பல்களும் செல்வதற்கு ஈரான் அனுமதிக்கும் வரை, ஹார்முஸ் நீரிணை வழியாக எந்த ஒரு கப்பலும் செல்ல அனுமதிக்க மாட்டோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
மேற்காசிய போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: அமைதி பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. பெரும்பாலான விஷயங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. ஆனால் கவலைக்குரிய விஷயமான அணுஆயுதம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
உலகின் மிச்சிறந்த அமெரிக்க கடற்படை , ஹார்முஸ் நீரிணைக்குள் நுழையவோ அல்லது அதில் இருந்து வெளியேறவோ முயற்சி செய்யும் அனைத்து கப்பல்களையும் தடுக்கும் வேலையை உடனடியாக துவங்கும். எல்லா கப்பல்களுக்கும் ஈரான் அனுமதிக்கும் வரையும் இது தொடரும்.
ஆனால், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்களை செல்ல அனுமதிக்காத ஈரான், அங்கு கண்ணி வெடி வைக்கப்பட்டுள்ளது. எங்கிருக்கிறது தெரியவில்லை எனக்கூறி வருகிறது. இது உலகளவில் மிரட்டி பணம் பறித்தல் ஆகும். இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட தலைவர்கள் யாரும் பயப்பட மாட்டார்கள்.
சர்வதேச கடல் பரப்பில் ஈரானுக்கு கப்பம் செலுத்தி உள்ள கப்பல்களை தேடி கண்டறிந்து தடுத்து நிறுத்தும்படி அமெரிக்க கடற்படைக்கு உத்தரவிட்டு உள்ளேன். சட்டவிரோதமாக கப்பம் கட்டிய எவருக்கும், பாதுகாப்பான பயணம் சாத்தியமாகாது. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் புதைத்து வைத்துள்ள கண்ணி வெடிகளை அழிக்கும் பணியையும் துவங்கி உள்ளோம். எங்கள் மீதோ அல்லது அமைதியான முறையில் பயணிக்கும் கப்பல்கள் மீதோ துப்பாக்கிச்சூடு நடத்தும் எவரேனும் நரகத்துக்கு அனுப்பப்படுவார்கள்.
மற்றவர்களை விட ஈரானுக்கு இது நன்றாக தெரியும். ஏற்கனவே அழிவை சந்தித்துள்ள ஈரானுக்கு எப்படி இந்த சூழ்நிலையை முடிவுக்கு கொண்டு வருவது என்பது பற்றி தெரியும். அவர்களின் கடற்படை, விமானப்படை அழிந்துவிட்டது. ரேடார் பயனற்றதாகிவிட்டது. அணு ஆயுதக் கொள்கையால் கமேனி உள்ளிட்ட பல தலைவர்கள் இறந்துவிட்டனர்.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களை தடுக்கும் பணி விரைவில் துவங்கும். மற்ற நாடுகளும் இந்தப் பணியில் ஈடுபடும். சட்டவிரோதமாக மிரட்டி பணம் பறித்து லாபம் பார்க்கும் ஈரானின் செயலை அனுமதிக்க முடியாது. அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது. குறிப்பாக அணுஆயுதம் தேவைப்படுகிறது. ஈரானில் மிச்சமிருப்பதையும் ராணுவம் அழித்துவிடும். இவ்வாறு அந்த அறிக்கையில் டிரம்ப் கூறியுள்ளார்.
இந்த போரில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாத தெற்கு ஆசிய நாடுகளை தண்டிக்க துடிக்கிறார் அமெரிக்க கோமாளி அதிபர். பாவத்தின் சம்பளம் மரணம் என்ற தேவனுடைய வாக்கு பலித்து அமெரிக்கா வீழ்ச்சி அடைய ஏசுநாதர் ஆசீர்வதிக்கட்டும்
போர் நிறுத்த சாக்கில் ஈரானுக்கு அனு ஆயுதத்தை பாகிஸ்தான் விற்பனை செய்து உள்ளதாக தகவல் அமெரிக்காவின் கண்களில் மண்ணைத் தூவி பாகிஸ்தான் பணத்தை அள்ளி உள்ளது இனி மேற்கு ஆசியாவில் தீபாவளி தான்
பிஜேபியின் திறமையான ஆட்சியால், இந்தியாவிற்கு இதுவரை எந்த பாதிப்பும் துளியும் இல்லை. ட்ரம்பின் இந்த முடிவால், ஒரு பாதிப்பும் இந்தியா போன்ற பெரிய பணக்கார பொருளாதார வல்லமை கொண்ட நாட்டிற்கு எந்த பாதிப்பும் ஏற்ப்பட வாய்ப்பில்லை. நமக்கான பெட்ரோலை அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியா பெற்றுக்கொள்ளும்.
ஒரு வழியாக மூர்க்கர்கள் ஒழிந்தால் சரி ...
சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்த கதை இது... அமெரிக்கா டாலர் க்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்து விட்டது
போர் தொடங்கும் முன் எல்லா கப்பல்களுக்கும் தடையேதும் இல்லாமல்தான் இருந்தது .
பாரதத்திற்கு எதிரான செயலாகத்தான் இதை பார்க்கப்படும். ட்ரம்பிற்கு உலகத்தையே ஆளவேண்டும் என்கிற பேராசை வந்துவிட்டது. ஹிட்லரின் நிலை தான் இவருக்கும்.
அமெரிக்க எதிர்ப்பு நாடுகள் ஒருங்கிணைய வேண்டும். அமெரிக்காவுடன் போர் வந்தாலும் கை கோர்த்து நிற்க வேண்டும். வேறு வழி இல்லை
கிழவன்கிட்ட மாட்டிக்கிட்டு இந்த உலகம் படுற பாடு இருக்கே? தாங்க முடியலடா சாமி!
சர்வதேச கடல் பகுதியில் கப்பம் ஒரு கொடிய வரி வசூல். இதனை அனுமதிக்கும் போது, ஏராளமான வன்முறை குழுக்கள் தோன்றி, உலகு முழுவதும் வசூல் செய்ய துவங்கி விடும். இதில் டிரம்ப் நடவடிக்கை சரியே. நோட்டோ நாடுகள் அமெரிக்காவுடன் ஒத்துழையாமை ஒரு பெரிய ஏமாற்றம். சுய நலம். ஈரானுக்கு அணு ஆயுதம் எப்போதும் தேவையில்லை. அதன் ஒரு எதிரி இஸ்ரேல். இஸ்ரேலை அழிக்க திட்டமிடுகிறது. நாளுக்கு ஒரு தலைவரை அறிமுக படுத்தும் ஈரான்/ பாகிஸ்தான் ஒடுக்க பட வேண்டும். இஸ்ரேல், அமெரிக்கா ஒன்று கூடி பாகிஸ்தான் அணு ஆயுதம் அழிக்க பட வேண்டும். உலகிற்கு எந்த நிமிடமும் அழிவு ஏற்படலாம்.மேலும்
-
தி.மு.க., எம்.எல்.ஏ., ஆபாச பேச்சு
-
கைவிட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்; கருப்பு கொடி ஏற்றிய நெசவாளர்கள்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
இறந்தவர்கள், சிறை சென்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி; ‛ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி