சிறுமிக்கு தொல்லை தொழிலாளி கைது

திருச்சி: மணப்பாறை அருகே, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளி, 'போக்சோ'வில் கைதானார்.

திருச்சி மாவட்டம், அணியாப்பூரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 52; கூலித்தொழிலாளி. இவர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

சிறுமியின் தாய் புகாரில், மணப்பாறை மகளிர் போலீசார், போக்சோவில் சுப்பிரமணியை கைது செய்தனர்.

Advertisement