உயர் ரத்த அழுத்தம்: மருத்துவ விடுப்பில் சென்றார் டேவிட்சன்
சென்னை : உயர் ரத்த அழுத்த பாதிப்பு காரணமாக, 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்வதாக, கட்டாய காத்திருப்பு பட்டியலில் உள்ள டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியுள்ளார்.
டிஜிபி சந்தீப்ராய் ரத்தோடுக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: நான் மார்ச் 2ம் தேதி, சென்னை ஆலந்துாரில் உள்ள அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநராக பொறுப்பேற்றேன். அதேபோல, சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள, ஆயுதப்படை அலுவலகத்தில் கூடுதல் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். இந்த இரு பதவிகளும் தேர்தல் தொடர்பானவை அல்ல. நான் ஏப்., 8ம் தேதி, அந்தப் பதவிகளில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய காத்திருப்பில் உள்ளேன்.
இதற்கு முன், எனக்கு இதய பிரச்னை காரணமாக, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருந்தது. மேலும், உயர் ரத்த அழுத்த பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வருகிறேன். குறைந்தது, 20 நாட்கள் ஓய்வு எடுத்து, மருந்துகள் உட்கொள்ள வேண்டும் என, டாக்டர் ஆலோசனை கூறியுள்ளார். அதனால், 22 நாட்கள் மருத்துவ விடுப்பில் செல்கிறேன்.இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.
சவுக்கு சங்கர் போன்ற ஊடகவியலாளர்கள் தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் என சொன்னால் ஒரு டாக்டர்கள் குழுவைப் போட்டு அவர்கள் அறிக்கைப் படி அப்புறம்தான் அதிகாரிகள் ஒரு முடிவுக்கு வருவார்கள்.
அதிகாரிகளுக்கு அந்தப் பிரச்சனை இல்லை. உயர் ரத்த அழுத்தத்திற்கெல்லாம் விடுமுறை எடுப்பது என்றால் தமிழக அரசு ஊழியர்கள் பாதிப்பேர் விடுப்பில்தான் இருப்பார்கள். அதுதான் உண்மை.
நீங்கள் செய்த அத்தனை அக்கிரமங்களுக்கும் எல்லா அழுத்தங்களையும் இனிமேல்
முடியலனா ரீசாய்ன் பண்ணுங்க எதுக்கு லீவு
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
வேலை செய்யுறப்ப வராத உயர் ரத்த அழுத்தம் காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தவுடன் வருகிறது?
ஊழலில் திளைப்பவர்களுக்கு இறைவன் கொடுக்கும் வரப்பிரசாதம் உயர் ரத்த அழுத்தம்.
ஆபீஸ்க்கு போனா கட்சி வேலை செய்ய முடியாது ஆஸ்பத்திரியில் உட்கார்ந்து தேர்தல் வேலை செய்யமுடியுமுங்கோ . இன்னும் 20 நாட்களை தள்ளிடலாம் அப்புறம் பார்த்துக்கலாம் கருமமே கண்ணாயினார்
இவ்வளவு நாள் இவர் யாருக்காக வேலை பார்த்தார் என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அதிகாரிகள் அரசாங்கத்திற்காக வேலை செய்யவேண்டுமே ஒழிய ஆட்சியாளர்களுக்கு அல்ல. இல்லையென்றால் மக்கள் பணத்தில் சம்பளம் வாங்காமல் ராஜினமா செய்து தனக்கு பிடித்த கட்சியில் சேர்ந்து சம்பாதிக்கலாம்.
யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்கலனா ... குடியரசுத்தலைவர் ஆட்சி வந்துரும் ... அப்போ ராஜினாமா பண்ணிருவாங்களா
தேவன் ஆசீர்வாதிப்பாராக...மேலும்
-
கூடுதல் பஸ் இயக்கணும்
-
'மாதிரி' டோக்கன் வழங்குவதில் போட்டா போட்டி :இரு கட்சியிலும் பூத் கமிட்டிகளுக்கு தாராளம்
-
வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை ஜோர்
-
ஆற்றில் குப்பை கொட்டினால் அபராதம்: பொதுமக்களுக்கு நகராட்சி எச்சரிக்கை
-
கரும்பு விவசாயிகளை கண்டுகொள்ளாத தி.மு.க., ;அ.ம.மு.க., சண்முகவேலு குற்றச்சாட்டு
-
நுாறு சதவீத ஓட்டுப்பதிவு நுாலகத்தில் விழிப்புணர்வு