வெயிலின் தாக்கத்தால் நுங்கு விற்பனை ஜோர்
வால்பாறை: கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வால்பாறையில் நுங்கு விற்பனை அதிகரித்துள்ளது.
சுற்றுலா பயணியர் அதிகளவில் வந்து செல்லும் வால்பாறையில், கடந்த மூன்று மாதங்களாக வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில் இம்மாதம் துவக்கத்தில் இருந்து வால்பாறை மலைப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இதனால், நகரில் உள்ள கடைகளில் இளநீர், தர்பூசணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து அதிகமுள்ள பொருட்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
வியாபாரிகள் கூறுகையில், 'வால்பாறையில் திரண்டுள்ள சுற்றுலா பயணியர் சாலையோரங்களில் விற்பனை செய்யப்படும் நுங்கு, தர்பூசணி, இளநீர் போன்றவைகளை அதிகளவில் உட்கொள்கின்றனர். நுங்கு 10 ரூபாய்க்கும், இளநீர் 60 ரூபாய்க்கும், தர்பூசணி கிலோ, 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வால்பாறையிலும் கோடை வெயில் நீடிப்பதால், நீர்ச்சத்து அதிகமுள்ள பழ வகைகள் அதிக அளவில் விற்பனையாகிறது' என்றனர்.
மேலும்
-
தினமலர் செய்தி கிடைத்தது தீர்வு
-
திருமண மேடையானது தேர்தல் பிரசார மேடை காட்டுமன்னார்கோவிலில் சுவாரசியம்
-
மதுரை அரசு மருத்துவமனையில் பாதுகாப்பிற்கு 'டபுள் கேட்': சுற்றிச் சுற்றி செல்லும் டாக்டர்கள், பணியாளர்கள்
-
பிரெஞ்ச் ஓபன்: பரிசு உயர்வு
-
உங்களில் ஒருவனாக இருக்கிறேன் :சபா ராஜேந்திரன் நெகிழ்ச்சி
-
பகலில் பற்றாக்குறை; இரவில் துண்டிப்பு: துாக்கம் தொலைத்த நாவினிபட்டி பொதுமக்கள்