நுாறு சதவீத ஓட்டுப்பதிவு  நுாலகத்தில் விழிப்புணர்வு 

உடுமலை: பூளவாடி கிளை நுாலகத்தில், நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.

வரும் சட்டசபை தேர்தலில், நுாறு சதவீத ஓட்டுப்பதிவுக்காக தேர்தல் ஆணையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அவ்வகையில், மக்கள் அதிகம் வந்து செல்லும் நுாலகங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த வழிகாட்டுதல் வழங்கப்பட்டது.

திருப்பூர் மாவட்ட நுாலக அலுவலர், மாவட்டத்திலுள்ள அனைத்து நுாலகங்களிலும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்த உத்தரவிட்டார்.

அதன்படி பூளவாடி கிளை நுாலகத்தில், தேர்தலில் ஓட்டு போடுவதன் முக்கியத்துவம் குறித்து வாசகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கிளை நுாலகர் லட்சுமணசாமி, நுாலக வாசகர்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பங்கேற்று பேசினர். விழிப்புணர்வு பிரசுரங்கள் அடங்கிய நோட்டீஸ் நுாலகத்திலும் பிற பகுதிகளிலும் ஒட்டப்பட்டது.

Advertisement