ஆசிய மல்யுத்தம்: அபிமன்யு 'தங்கம்'

பிஷ்கெக்: ஆசிய மல்யுத்தத்தில் இந்தியாவின் அபிமன்யு தங்கம் வென்றார்.

கஜகஸ்தானில், ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' பிரிவு போட்டிகள் நடந்தன. இதில் 70 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் அபிமன்யு, மங்கோலியாவின் துல்கா துமுர்-ஒசிர் மோதினர். அபிமன்யு 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.

பின், 79 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் சந்தீப் சிங் மான், ஜப்பானின் கெய்வான் கரேதாகி மோதினர். இதில் சந்தீப் சிங் 1-2 என தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.

அடுத்து நடந்த 86 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் முகுல் தாஹியா 0-7 என்ற கணக்கில் ஈரானின் கோர்பன் காசெம்போரிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார். கோர்பன் தங்கத்தை கைப்பற்றினார்.

பின், 61 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அமன் 10-13 என, வட கொரியாவின் கிவாங் மியோங் கிம்மிடம் தோல்வியடைந்து வெள்ளி வென்றார்.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் (125 கிலோ) இந்தியாவின் தினேஷ் 12-1 என கிர்கிஸ்தானின் அர்ஸ்லான்பெக்கை வீழ்த்தினார்.


இத்தொடரில் இந்தியாவுக்கு 2 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என, 17 பதக்கம் கிடைத்தது.

Advertisement