இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை

புதுச்சேரி: அடையாளம் தெரியாத இருவர் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திலாசுபேட்டை காமராஜர் சாலையில், 70 வயது மதிக்கதக்க முதியவர் கடந்த 11ம் தேதி அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், படுகாயமடைந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து,

போக்குவரத்து வடக்கு பகுதி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

லாஸ்பேட்டை திரவுபதி அம்மன் கோவில் அருகில், நின்ற ஜல்லிபோடும் மிஷினில் 50 வயது மதிக்கதக்கவர் துாக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. லாஸ்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement