10 தோல்வி பழனிசாமி 11வது தோல்வியை சந்திக்க வேண்டும்: பரமக்குடியில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
பரமக்குடி: ''தமிழகத்துக்கு துரோகம் செய்யும் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வியை தர வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தி.மு.க., வேட்பாளர்கள் ராஜ கண்ணப்பன், காதர் பாட்ஷா, கதிரவன், காங்., வேட்பாளர் கருமாணிக்கம் ஆகியோரை ஆதரித்து நடந்த இந்த பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது :
இந்தியாவில் முதல் மாநிலமாக 11.19 சதவீதம் பொருளாதாரம் வளர்ச்சி பெற உழைத்துள்ளோம். ஐந்து ஆண்டுகளில் என்னை செய்திகளில் பார்க்காத நாள் இருக்காது. ஆய்வு கூட்டம், கள ஆய்வுகள், அரசு நலத்திட்டங்கள் என தொடர்ந்து நடந்தன. அரசு இயந்திரத்தை முழுமையாக செயல்பட வைத்தேன். அமைச்சர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை உழைத்து இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழகத்தை கொண்டு வந்திருக்கிறோம்.
இந்த வளர்ச்சி போதுமா, போதாது. தமிழகத்தை உலக அளவில் தனி பிராண்டாக நீங்கள் வளர்க்க வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
நமது ஆட்சிக்கு சாட்சி உங்கள் முகங்களின் மகிழ்ச்சியே. இப்படி ஒரு நாளாவது பழனிசாமி பேசியிருக்கிறாரா. அவர் மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார். அடுத்தவருடைய மரணத்தை எதிர்பார்த்து பேசுவது அவருடைய கடமையாக இருக்கிறது. பெண்களை கண்ணியம் இல்லாமல் தொடர்ந்து பேசுகிறார். சாக்கடைக்கு சரிசமமாக பேசும் அவருக்கு ஏப்., 23ல் பாடம் புகட்ட வேண்டும்.
நான் முதல்வரானதும் போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான விடியல் பயண திட்டம் தான். 2021ல் உங்களிடம் ஆதரவை கேட்ட போது நான் சொன்னேன். அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலை நோக்கு பார்வையை உறுதிமொழிகளாக கொடுத்து வாக்கு கேட்டேன். அந்த அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சி என்பது 2.0 திட்டம்.
இந்தியா, இலங்கை ஒப்பந்தம் மீளாய்வு செய்யப்பட்டு கச்சத்தீவை மீட்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்துவோம்.
வடக்கு வாழ்கிறது, தெற்கே தேய்கிறது, என்ற நிலையை மாற்றி அமைத்தேன். மகளிருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கிறோம் என்ற காரணம் காட்டி மத்தியில் தமிழக பிரதிநிதிகளை குறைக்க பார்க்கிறார்கள்.
பா.ஜ., வை தமிழகத்தில் அனுமதிக்க பல்லக்கு துாக்கியாக மாறிவிட்டார் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. உக்ரைன் போரை நிறுத்தி விட்டேன். அமெரிக்காவை அலற விட்டேன், என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடிய பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கையில் மீனவர்கள் பாதுகாப்பு தொடர்பாக பேச சொன்னால் மவுன குருவாகி விடுகிறார்.
தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக நினைப்பது இல்லை. சட்ட சபையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
இதுவரை ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பா.ஜ., விற்கு தமிழகம் மீது வரும் அக்கறை வெறும் ஸ்டண்ட் தான். பொது சிவில் சட்டம் குறித்து பழனிசாமி நிலைப்பாடு என்ன.
தமிழகத்தை அவர் ஆட்சி செய்த 4 ஆண்டுகளில் நடந்தது ஊழல்கள் மட்டும் தான். பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சி சாட்சி. கொடூரமான ஆட்சிக்கு கொடநாடு சாட்சி. கேடுகெட்ட ஆட்சிக்கு சாத்தான்குளம் சாட்சி. துப்பு கெட்ட ஆட்சிக்கு துாத்துக்குடி சாட்சி, பழனி்சாமி தன்னுடைய தவறுகள் மறைக்க தப்பிக்க சரண்டர் ஆன இடம்தான் பா.ஜ., அதற்கு அவர் கொடுத்த விலை தான் தமிழகத்தின் உரிமைகள்.
அ.தி.மு.க., விற்கு விழும் ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ., வுக்கு விழும் ஓட்டுகள். பா.ஜ., வை இந்த தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும். டில்லியின் ரிமோட் கன்ட்ரோல் அடிமைகள் தமிழகத்தில் ஆளக்கூடாது. தமிழகத்துக்கு துரோகம் செய்யும் 10 தோல்வி பழனிசாமிக்கு 11வது தோல்வியை தர வேண்டும்.
நேற்று ஐ.பி.எல் மேட்ச் பார்த்திருப்பீங்கன்னு நினைக்கிறேன். அதில் டில்லி அணியும் தமிழக அணியும் விளையாடின. அதில் சென்னை அணி வெற்றி பெற்றது. அதேபோல இந்த தேர்தலில் வெற்றி பெற போவது யாரு. டில்லி அணியா, தமிழக அணியா. புரிஞ்சுக்கோங்க. நாம் போராடுவது ஏதோ தி.மு.க., வெற்றிக்காக மட்டும் அல்ல. ஒட்டுமொத்த தமிழகத்துக்காக தான். அடுத்து வெற்றி பெற்று 2.2 ஆட்சி அமைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
அடேங்கப்பா பெருசு என்னமா டான்ஸ் ஆடுது.
மைனாரிட்டி தி மு க காலத்தை நினைவு கொள்ளவும்
பார்க்காத தோல்வியா...1972 முதல் எம் ஜிஆர் மறையும் வரை
இதற்கு முந்தைய திமுக ஆட்சி காலத்தில் 2006-11 ஸ்டாலின் அண்ணன் அழகிரி பெயர், போட்டோ வராத நாளே கிடையாது.
365 நாளும் பிறந்த நாள் விழா என கொண்டாடி தீர்த்தார். ஆனால் அதன் பிறகு அவர் இருக்குமிடமே தெரியவில்லை.
அது போல் தான் ஸ்டாலினுக்கும் நடக்க போகிறது. முன்னாள் ஆந்திர, தெலுங்கானா மற்றும் டெல்லி முதல்வர்களாக இருந்த ஜெகன்மோகன், சந்திரசேகர் ராவ், கெஜ்ரிவால் போன்று கோமா நிலைக்கு ஸ்டாலின் செல்வது உறுதி.
ஓவர் விளம்பரம் உடலுக்கு நல்லதல்ல..
தோல்வி நிரந்தரம் அல்ல. ஏன் இந்த எக்காளம் .
வாய்க்கொழுப்புதான் தமிழ்நாட்டை கெடுத்திருக்கு .......
ஒரே அடியாக திராவிட மாடலின் ஆயுசு தோல்வியை சந்திக்கும் சுடலை துண்டுசீட்டு.
தூக்கத்தில் கூட திடீரென எழுந்து உட்கார்ந்து பழனிச்சாமியை எண்ணி நடுங்கிக் கொண்டிருப்பார் போல. வருகின்ற செய்திகள் எதுவும் சாதகமாக இல்லாதததால் மனுஷன் சும்மா ஆடிப் போய் உள்ளார்.
முழுக்க எல்லா இடத்திலும் தோல்வி நிச்சயம் . திராவிடம் முழுக்க அழிவது நடக்கும்.
இனி அடுத்த முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி அவர்கள் தான். நீங்க எதிர்கட்சி தலைவராக வருவதற்கு முயற்சி பண்ணுங்கமேலும்
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி