வெகுமதி: ஹெச்.டி.எப்.சி., வங்கி 'ரிவார்டு' புள்ளிகள் குறைப்பு
தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த சலுகைகளை குறைக்கும் வகையில், ஹெச்.டி.எப்.சி., வங்கி தனது 'ரெகலியா கோல்டு' மற்றும் 'டைனர்ஸ் பிரிவிலேஜ்' கிரெடிட் கார்டுகளுக்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வரும் மே 15 மற்றும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
@block_B@ முக்கிய மாற்றங்கள்
மே 15ம் தேதி முதல்
* இதுவரை 150 ரூபாய் செலவு செய்தால் 4 ரிவார்டு புள்ளிகள் வழங்கப்பட்டு வந்தன. இனி 200 ரூபாய் செலவு செய்தால் மட்டுமே 5 புள்ளிகள் வழங்கப்படும்
* வெளிநாட்டு பண பரிவர்த்தனை கட்டணம் 1.75 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது
* கார்டு தொலைந்தால் மீண்டும் பெற 199 ரூபாய் கட்டணம்
ஜூலை 1ம் தேதி முதல்
* மூன்று மாதங்களில் குறைந்தபட்சம் கார்டு வாயிலாக 60,000 ரூபாய் செலவு செய்திருந்தால் மட்டுமே, அடுத்த மூன்று மாதங்களுக்கு விமான நிலைய 'லவுஞ்ச்' வசதி
* புதிய 'டிராவல் எட்ஜ்' திட்டத்தின் வாயிலாக 'போர்டிங் பாஸ்' சமர்ப்பித்து, 'ஊபர்' பயணம் (ஒரு முறைக்கு 750 ரூபாய் வரை), ஸ்பா வசதி, நட்சத்திர ஹோட்டல்களில் இலவச உணவு அல்லது 'ஹோட்டல் அப்கிரேடு' போன்ற சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம்.block_B
மேலும்
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி