முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.13 லட்சம் கோடி ரூபாய் அதிகரிப்பு
கடந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகள் ஏற்ற பாதைக்கு திரும்பின. நாட்டின் டாப் 10 முன்னணி நிறுவனங்களில், 'இன்போசிஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தவிர்த்து மீதமுள்ள எட்டு நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு, கடந்த ஒரே வாரத்தில் 4.13 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது.
இதில் ஹெச்.டி.எப்.சி., வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி ஆகியவை முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை வழங்கியுள்ளன.
அமெரிக்கா - ஈரான் இடையேயான தற்காலிக போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்த நம்பிக்கையான சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 100 டாலருக்கும் கீழே சரிந்தது, சந்தையில் பெரும் ஏற்றத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, கடந்த வாரத்தில் மட்டும் சென்செக்ஸ் 4,230 புள்ளிகளும், நிப்டி 1,337 புள்ளிகளும் உயர்ந்து காணப் பட்டன.
இந்த அதிரடி ஏற்றத்தில் அதிக பலன் அடைந்தது ஹெச்.டி.எப்.சி., வங்கி தான். இந்த வங்கியின் சந்தை மதிப்பு மட்டும் ஒரே வாரத்தில் 91,282 கோடி ரூபாய் உயர்ந்து, ஒட்டுமொத்தமாக 12.47 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.
இதனை தொடர்ந்து, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் மதிப்பு 76,036 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது.
@block_B@ டாப் 10 நிறுவனங்களின் சந்தை மதிப்பு நிறுவனம் சந்தை மதிப்பு (ரூ.கோடியில்) ஹெச்.டி.எப்.சி., பேங்க் 91,282 (உயர்வு) ஐ.சி.ஐ.சி.ஐ., பேங்க் 76,036 (உயர்வு) பஜாஜ் பைனான்ஸ் 60,980 (உயர்வு) எல் அண்டு டி 47,624 (உயர்வு) பார்தி ஏர்டெல் 45,873 (உயர்வு) எஸ்.பி.ஐ., 43,614 (உயர்வு) டி.சி.எஸ்., 26,303 (உயர்வு) ஹிந்துஸ்தான் யூனிலீவர் 21,287 (உயர்வு) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 947 சரிவு) இன்போசிஸ் 3,285 (சரிவு) நிலவரம்: ஏப்ரல் 6 - 10, 2026block_B
@block_B@ ரூ.48,213 கோடி அன்னிய முதலீடுகள் வெளியேற்றம்
இந்திய பங்குச்சந்தையில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் வெளியேறும் நிகழ்வு இந்த மாதமும் தொடர்கிறது. ஏப்ரல் மாதத்தின் முதல் 10 நாட்களில் மட்டும் 48,213 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை அவர்கள் விற்று வெளியேறியுள்ளனர். கடந்த பிப்ரவரி மாதத்தில் 22,615 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்ட நிலையில், மார்ச் மாதத்தில் நிலைமை தலைகீழானது. மார்ச் மாதத்தில் மட்டும் 1.17 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டன. இது இந்திய சந்தை வரலாற்றிலேயே ஒரு மாதத்தில் நடந்த மிக மோசமான வெளியேற்றமாகும். நடப்பாண்டில் இதுவரை கிட்டதட்ட 1.80 லட்சம் கோடி ரூபாய் அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளதாக என்.எஸ்.டி.எல்., தரவுகள் தெரிவிக்கின்றன. மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பணவீக்கம் குறித்த அச்சமே இந்த வெளியேற்றத்திற்கு காரணம் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.block_B
மேலும்
-
ஜோசப் விஜய்- - உதயநிதிக்கு முதல்வராக தகுதி இல்லை
-
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பிரசாரத்தில் திடீர் மயக்கம்
-
மதுரை, கோவை மெட்ரோ ரயில் தி.மு.க., பொய் செய்தி பரப்புகிறது: மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் குற்றச்சாட்டு
-
இறந்தவர்கள், சிறை சென்ற ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி; ‛ஆப்சென்ட்' குறித்து விளக்கம் கேட்டபோது அதிர்ச்சி
-
ராமதாஸ் இல்லாத நேரத்தில் தாயிடம் ஆசி பெற்ற அன்புமணி
-
காங்., மகளிர் அணி கூட்டத்தில் மோதல்; நாற்காலிகளை துாக்கி வீசி கைகலப்பு