ராமதாஸ் இல்லாத நேரத்தில் தாயிடம் ஆசி பெற்ற அன்புமணி
சென்னை: பா.ம.க., நிறுவனர் ராமதாசும், அவரது மகன் அன்புமணியும் இரு துருவங்களாக இயங்கி வருகின்றனர்.
கட்சி, சின்னம், கொடி உள்ளிட்டவற்றின் உரிமை குறித்த வழக்குகளில் தேர்தல் ஆணையமும், நீதிமன்ற உத்தரவுகளும் அன்புமணிக்கே சாதகமாக உள்ளதால், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்பு கழகம் என்ற புதிய கட்சியை ராமதாஸ் தொடங்கினார்.
அன்புமணி நிறுத்தியுள்ள பா.ம.க., வேட்பாளர்களுக்கு போட்டியாக, தன் தரப்பிலும் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.
இந்நிலையில், சேலம் மேற்கு தொகுதியில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் எம்.எல்.ஏ., அருளை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக, ராமதாஸ் நேற்று காலை சேலம் சென்றார். அவரது மகள் ஸ்ரீ காந்தியும் உடன் சென்றார்.
இந்நிலையில், கடலுார் மாவட்டத்தில் பிரசாரத்திற்கு சென்ற அன்புமணி, நேற்று பகல் 1:30 மணியளவில் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் உள்ள ராமதாஸ் வீட்டிற்கு சென்றார்.
அங்கு தன் தாய் சரஸ்வதியை சந்தித்து, அவரிடம் ஆசி பெற்றார். ஒரு மணி நேரத்துக்கும் மேல், தன் தாயுடன் பேசிக் கொண்டிருந்த அன்புமணி, அவருடன் மதிய உணவு சாப்பிட்டார்.
தன் தாய் சரஸ்வதியை சந்தித்த பா.ம.க., தலைவர் அன்புமணி. இடம்: தைலாபுரம், திண்டிவனம்.
மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி