பொரியல் தட்டை விலை உயர்வு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நாள்தோறும் ஏராளமான விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை ஏல முறையில் விற்பனை செய்கின்றனர். இங்கு பல்வேறு வகையான காய்கறிகள் உடனுக்குடன் விற்பனையாகிறது.
இந்நிலையில், நேற்று மார்க்கெட்டில், 1,500 கிலோவுக்கு அதிகமாக பொரியல் தட்டை வரத்து இருந்தது. ஒரு கிலோ, 70 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வியாபாரிகள் கூறுகையில், 'பொரியல் தட்டை வரத்து வழக்கமாக இருக்கும். கடந்த இரண்டு மாதங்களாக, ஒரு கிலோ 20 முதல், 30 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, சித்திரை திருநாளை முன்னிட்டு ஒரு கிலோ 70 முதல் 75 ரூபாய்க்கு விற்பனையானது,' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement