துணை ராணுவ படையினர் போலீசார் கொடி அணிவகுப்பு

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையத்தில் தேர்தல் பாதுகாப்பு தொடர்பாக போலீசார் மற்றும் துணை ராணுவ படை பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடந்தது.

தமிழக சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அச்சமின்றி, சுதந்திரமாக ஓட்டுப்பதிவு செய்யவும், தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று துணை ராணுவ படை பங்கேற்ற கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கஸ்துாரிபாளையத்தில் துவங்கிய ஊர்வலம், பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட் வழியாக மேட்டுப்பாளையம் ரோடு கே. ஆர்., மருத்துவமனை முன் முடிந்தது.

ஏ.எஸ்.பி., இன்பா, பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., பொன்னுசாமி, பெரியநாயக்கன்பாளையம் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், தடாகம் இன்ஸ்பெக்டர் சித்ரா, பெரியநாயக்கன்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் மற்றும் பி.எஸ்.எப்., இன்ஸ்பெக்டர், வீரர்கள், மகாராஷ்டிரா மாநில போலீசார், பெரியநாயக்கன்பாளையம் சப் டிவிஷனுக்கு உட்பட்ட போலீசார் பங்கேற்றனர்.

Advertisement