பைக்கில் சென்ற பெண்ணிடம் ஒரு சவரன் தங்க சங்கிலி பறிப்பு
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூர் பகுதியில் பைக்கில் சென்ற பெண்ணிடம், மர்ம நபர்கள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
பொள்ளாச்சி, வடுகபாளையத்தை சேர்ந்தவர் மல்லிகா, 45. இவர், வடக்கிபாளையத்தில் வசித்து வருகிறார். இவரது மூத்த மகள் ஜோதி வீட்டிற்கு செல்ல தனது பைக்கில் நேற்று இரவு, பொள்ளாச்சி --- கோவை ரோடு கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதூர் அருகே சென்ற போது, இவரின் பின்னால் அடையாளம் தெரியாத இரு நபர்கள் பைக்கில் வந்து, கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இது குறித்து, கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் மல்லிகா புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி, செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
எம்ஜிஆரிடம் மூன்று முறை தோற்றவர் கருணாநிதி: அண்ணாமலை
-
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 :அ.தி.மு.க., வேட்பாளர் சோமசுந்தரம் பிரசாரம்
-
அக்கமாபுரம் குளத்தை துார்வார நடவடிக்கை எடுக்க கோரிக்கை
-
கிரிக்கெட்: ஆக்கூர் அணி வெற்றி
-
தி.மு.க., ஆட்சியில் 5 ஆண்டு சாதனைகள்: காஞ்சியில் வேட்பாளர் நித்யா சுகுமார் பிரசாரம்
-
உத்திரமேரூர் தி.மு.க., வேட்பாளருக்கு கிராமங்களில் உற்சாக வரவேற்பு
Advertisement
Advertisement