முதல் முறை வாக்காளர்களுக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல் முறை வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரம் மூலம் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உளுந்துார்பேட்டை பாலி தனியார் கல்லுாரியில் மாவட்ட தேர்தல் அதிகாரி பிரசாந்த் தலைமையில் முதல் முறை வாக்காளர்களுக்கு தேர்தல் நாள், நேரம், ஓட்டளிப்பின் முக்கியத்துவம், விதிமுறைகள் மற்றும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், விவிபேட் இயந்திரம் மூலம் மாதிரி ஓட்டுப்பதிவு நடத்தி விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டது.

தொடர்ந்து 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, பலுான் பறக்க விடுதல், மனித சங்கிலி, கலை நிகழ்ச்சிகள் நடந்தது. வட்டார போக்கு வரத்து அலுவலகம் சார்பில் பஸ் நிலையத்தில் வாகனங்களில் 100 சதவீத ஓட்டுப்பதிவிற்கான ஸ்டிக்கர்கள் ஓட்டி, ஆட்டோ ஊர்வலமும் நடத்தப் பட்டது.

தியாகதுருகம், வடதொரசலுார் தனியார் தொழிற்பயிற்சி நிலையம், சின்னசேலம் பங்காரம் தனியார் கல்லுாரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் மனித சங்கிலி, மருதாணி வரைதல், கலை நிகழ்ச்சிகள் நடந்தது.

மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் லலிதா, உளுந்துார்பேட்டை வட்டார போக்குவரத்து அலுவலர் நெடுஞ்செழிய பாண்டியன், தேர்தல் நடத்தும் அலுவலர் செந்தில்குமார், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்ரமணியன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement