தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது :சித்திரைக்கனி கண்ட மக்கள்
திருப்பூர்:'பராபவ' தமிழ்ப்புத்தாண்டு பிறந்தது; திருப்பூரில், தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
'சித்திரையே வா, மக்கள் வாழ்வில் முத்திரை பதிக்க வா,' என்ற முழக்கத்திற்கேற்ப, தேர்தல் களையோடு, தமிழ்ப்புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளும் களைகட்டியுள்ளன.
ஒரு ஆண்டின், 12 மாதங்களில் சித்திரை, முதல் மாதமாக கருதப்படுகிறது. சித்திரை பிறந்ததுமே இளவேனிற்காலம் என்னும் வசந்த காலம் துவங்கும். இக்காலத்தில் மாமரங்களில் தளிர்களும், மலர்களும் பூத்துக்குலுங்கும். வேப்ப மரங்களில் வேப்பம் பூக்கள் பூத்துக்குலுங்கும். மனித வாழ்க்கை என்பது இனிப்பும், கசப்பும் கலந்தது என்பதை உணர்த்தும் இயற்கையின் நிகழ்வு தான் இது. தீபாவளி, பொங்கல் பண்டிகைகளுக்கு இணையான ஆரவாரத்துடன், தங்களின் கலாசார அடையாளமாக பொதுமக்கள் இப்புத்தாண்டை வரவேற்கின்றனர்.
கனி காணுதல்
வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, கோலமிட்டு, முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் மங்களப் பொருட்களான நெல், நகைகள், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி போன்றவற்றை பொதுமக்கள் வைத்தனர். அதிகாலையில், வீட்டின் மூத்த பெண் எழுந்து விளக்கேற்றி, மற்றவர்களை கண்கள் மூடிய நிலையிலேயே அழைத்து வந்து இந்த மங்களப் பொருட்களைத் தரிசித்தனர்.
இவ்வாறு செய்வதால் ஆண்டு முழுதும் செல்வம் செழித்து, மகிழ்ச்சி பொங்கும் என்பது நம்பிக்கை வாழ்க்கையை உணர்த்தும். உணவு சித்திரை புத்தாண்டின் மற்றுமொரு சிறப்பம்சம் அறுசுவை உணவு. இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய அனைத்தும் அன்றைய உணவில் இடம்பெறும். மங்களகரமான நாட்களில் கசப்பை தவிர்க்கும் வழக்கம் இருந்தாலும், புத்தாண்டு அன்று மட்டும் கசப்புக்காக வேப்பம்பூ பச்சடி அல்லது பாகற்காய் சேர்க்கப்படுகிறது.
இன்பம், துன்பம் என அனைத்தும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை அறிவுறுத்தவே இந்த பாரம்பரியம் பின்பற்றப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, அனைதது கோவில்களில் சிறப்பு பூஜை, பஞ்சாங்கம் வாசித்தல் உட்பட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
.
மேலும்
-
பா.ஜ. வேட்பாளருக்காக வீடு வீடாக பிரசாரம்
-
தமிழகத்தின் உற்பத்தி துறையில் கோவையின் பங்கை 25 சதவீதமாக உயர்த்திக் காட்டுவோம் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி
-
'மக்கள் திட்டங்களை செயல்படுத்த தவறியவர்கள் அ.தி.மு.க.,வினர்'
-
போதைப் பொருட்கள் இல்லாத சிங்காநல்லுாரே எனது நோக்கம் :உறுதியளிக்கிறார் அ.தி.மு.க.ஜெயராம்
-
சூழ்ச்சி என்றும் வெல்லாது... தர்மம் வெல்லும்: டி.ஆர்.எஸ்.
-
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு துவங்கியது ஓட்டுப்பதிவு!