'உதயசூரியனுக்கு ஓட்டு போடுங்கள்' :கோகிலாமணியை ஆதரித்து ராஜா பேச்சு
அவிநாசி:அவிநாசி தொகுதி தி.மு.க. வேட்பாளர் டாக்டர் கோகிலாமணிக்கு ஆதரவாக, தி.மு.க. துணை பொது செயலாளர், எம்.பி., ராஜா நேற்று அவிநாசியில் பிரசாரம் செய்தார். அவர் பேசியதாவது:
ஒவ்வொரு குடும்பத்திலும் நம் முதல்வர் ஸ்டாலின் நீக்கமற ஒவ்வொருவரின் மனதிலும் அமர்ந்திருக்கிறார். மகளிர் உரிமைத் தொகை, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, மாணவியருக்கு உதவித்தொகை, லேப்டாப், விடியல் பயணம் என எண்ணற்ற திட்டங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ளவர்களுக்கு பயன் தருகிறது.
தற்போது வேட்பாளராக உள்ள டாக்டர் கோகிலாமணி அந்த வீட்டின் முதல் தலைமுறை பட்டதாரி. இந்தத் தொகுதிக்கு என மத்திய அரசிடமிருந்து, 180 கோடி ரூபாய் மதிப்பில் அவிநாசி - அன்னுார் நான்கு வழிச்சாலை திட்டத்தை துவக்கி வைத்துள்ளோம். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்கு, சுத்திகரிப்பு கட்டமைப்பை கேட்டு பெற்றுத் தந்தோம். எனவே, மீண்டும் பல நல்ல திட்டங்களை செயல்படுத்திட உதயசூரியன் சின்னத்தில் டாக்டர் கோகிலாமணிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, நகர செயலாளர் வசந்த்குமார், மா.கம்யூ. மூத்த தலைவர் முத்துசாமி, வட்டார காங். தலைவர் தங்கமுத்து, தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் பிரசாந்த், கொ.ம.க. நிர்வாகி சுகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
கிராமங்களில்...
சேவூர் ஒன்றியத்துக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் கோகிலாமணி பிரசாரம் செய்தார். பெண்கள் உற்சாகத்துடன் குலவையிட்டு ஆரத்தி எடுத்து
சால்வை, மாலை அணிவித்து வரவேற்பு கொடுத்தனர். ''ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாத கிராமப் பகுதிகளில் ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்படுத்தப்படும், விவசாயிகளின் பிரச்னைகளை கேட்டறிந்து தேவைகளை பூர்த்தி செய்ய நிச்சயம் பாடுபடுவேன்'' என்று உறுதிகூறினார்.
சேவூர் ஒன்றிய செயலாளர் பால்ராஜ், திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. தொழிலாளர் அணி அமைப்பாளர் அவிநாசியப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மேலும்
-
ஊழல் செய்தால் ரத்த வாந்தி; சுடுகாட்டில் சுயேச்சை பூஜை
-
'அவை குறிப்பிலிருந்து நீக்க முடியாது' ; சபாநாயகரை கலாய்த்த இளைஞர்கள்
-
மது குடிப்போர் சங்கத்திற்கு ராமதாஸ் சின்னம்
-
கருணாசுக்கு 'நோ' ; தி.மு.க.,வினர் அடம்
-
35 கட்சிகளை தனியே த.வெ.க., எதிர்க்கிறது
-
ஒருபோதும் காசு, பதவிக்காக நான் தடம் மாற மாட்டேன்: நடிகர் ராமராஜன் விளக்கம்