மூத்த குடிமக்களுக்கு கிரிக்கெட் போட்டி 

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பழைய கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடந்தது. 100 சதவீத ஓட்டுபதிவு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக கல்லுாரி மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அதேபோல், உளுந்துார்பேட்டையில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி மூத்த குடிமக்களுக்கான விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலகம் சார்பில் திருநாவலுார் தனியார் முதியோர் இல்லம் மற்றும் உளுந்துார்பேட்டை தனியார் முதியோர் இல்லம் இடையே கிரிக்கெட் போட்டி நடந்தது. இதில் 100 சதவீதம் ஓட்டுபதிவு தொடர்பான விழிப்புணர்வு வாசகத்துடன் முதியோர்கள் மூக்கு கண்ணாடி அணிந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertisement