'பீப்' கொடுத்தால் 'போர்க்' தரணும் போராட்டத்தால் வெடித்த சர்ச்சை சென்னை பல்கலை விடுதியில் பதற்றம்
சென்னை: சென்னை பல்கலை விடுதியில், ஒரு தரப்பு மாட்டிறைச்சி சமைத்த விவகாரம் சர்ச்சை ஏற்படுத்தி வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் பன்றி இறைச்சி தரும்படி கேட்பதால், இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் உருவாகி வருகிறது.
விடுதியில் பதற்றம் நிலவி வருவதால், சென்னை பல்கலை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தரமணியில் செயல்படும் சென்னை பல்கலைக்கான விடுதியில் 400க்கும் அதிகமான மாணவர்கள் தங்கியுள்ளனர். இவர்களுக்கு, வாரத்தில் மூன்று நாள் அசைவ உணவு வழங்கப்படுகிறது. இதில் ஞாயிறுக்கிழமை, மாணவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப, அசைவ உணவு வழங்கும் நடைமுறை உள்ளது.
அதன்படி, கடந்த மாதம் நடந்த, விடுதி பொதுக்குழு கூட்டத்தில், ஞாயிற்றுக்கிழமை உணவில் மாட்டிறைச்சி வழங்க, மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். விடுதி நிர்வாகம், அதை கண்டுகொள்ளவில்லை.
இதற்கிடையில், விடுதி மாணவர்களுக்கான பிரத்யேக 'வாட்ஸாப்' குழுவில், மாட்டிறைச்சி கேட்ட மாணவர்களுக்கு எதிராக, சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, ஒரு தரப்பு மாணவர்கள் விடுதி வளாகத்தில் கடந்த 10ம் தேதி இரவு, போராட்டம் நடத்தினர். அப்போது, விடுதி நிர்வாகம், 'கமிட்டி அமைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்ததைத் தொடர்ந்து, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்நிலையில், விடுதி நிர்வாக விதிமுறைகளை மீறி, அனுமதியின்றி சிலர், விடுதி வளாகத்தில் நேற்று முன்தினம் மாட்டிறைச்சி சமைத்து சாப்பிட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விடுதி மாணவர்களில் மற்றொரு தரப்பினர், 'எங்களுக்கு பன்றி இறைச்சி சமைத்து தர வேண்டும்' என்றனர். இதனால், இரு தரப்பிற்கும் இடையே, மோதல் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:
விடுதியில் ஞாயிற்றுக்கிழமை வழங்கும் உணவில், 'எக்ஸ்டிரா' முறையில் ஏதேனும் ஒரு அசைவ உணவு வழங்கப்படும். இது மாணவர்கள் விருப்பம் தான். எனவே, சிலர் மாட்டிறைச்சி வழங்க கூறுகின்றனர். ஆனால், பலருக்கும் அது பிடிக்கவில்லை.
இந்நிலையில், மற்றொரு தரப்பினர் பன்றி இறைச்சி கேட்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. சூழ்நிலை மேலும் மோசமடையாமல் தடுக்க, நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மேலும்
-
ஓடி ஜெயிப்பதற்கு ஓட்டப்பந்தயமா: இது ஓட்டுப்பந்தயம் என்கிறார் சீமான்
-
நெல்லுக்கு ஊக்கத்தொகை விவகாரம்; கடிதத்தை வெளியிட்டு முதல்வருக்கு நிர்மலா பதிலடி
-
பாமகவில் ‛கண்ணாமூச்சி' ஆடும் அப்பாவும் மகனும்: கோபத்தில் தந்தை குதிக்கிறார்; பாசத்தில் மகன் தவிக்கிறார்: குழப்பத்தில் பாட்டாளி'கள்!
-
அப்போலோ மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதி
-
விஜய் பிரசாரத்திற்கு தேர்தல் கமிஷன் அனுமதி கொடுக்கணும்: அண்ணாமலை ஆதரவு குரல்
-
சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து; ஒருவர் பலி