எங்கள் ஓட்டு அ.தி.மு.க.,விற்கு தான் வளர்மதியிடம் வாக்காளர்கள் உறுதி

சென்னை: 'கடந்த தேர்தலில் தி.மு.க.,விற்கு ஓட்டளித்து ஏமாந்ததுதான் மிச்சம். இம்முறை அ.தி.மு.க.,விற்குதான் ஓட்டுப் போடுவோம்' என, வள்ளுவர்கோட்டம் பிரகாசம் சாலை வாக்காளர்கள், அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதியிடம் உறுதி அளித்தனர்.

ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி, கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, பிரகாசம் சாலை உள்ளிட்ட பகுதிகளில், நேற்று ஓட்டு சேகரித்தார்.

மாம்பலம் கால்வாயை ஒட்டிய பகுதிக்கு சென்றபோது, கடும் துர்நாற்றமும், சுகாதாரமற்ற சூழல் இருப்பதையும் கண்ட வேட்பாளர் வளர்மதி, ''அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், மூடுகால்வாய்களாக மாற்றப்படும். சுகாதார பிரச்னையில் கவனம் செலுத்தப்படும். மகளிர் உதவித்தொகை அனைவருக்கும் பெற்றுத்தரப்படும்,'' என, உறுதி அளித்தார்.

பிரகாசம் சாலையில், பெண் வாக்காளர் ஒருவர் கூறுகையில், 'கடந்த 2021ம் ஆண்டு தேர்தலின்போது, 'அனைவருக்கும் பட்டா வழங்கப்படும்' என, தி.மு.க., வேட்பாளர் உறுதி அளித்ததை அடுத்து ஓட்டளித்தோம்.

'இதுவரை பட்டா தரப்படவில்லை; ஏமாற்றமே மிஞ்சியது. இம்முறை, அ.தி.மு.க.,வில் வேட்பாளராக நிற்கும் உங்களுக்கு தான் ஓட்டுப்போடுவோம். நிச்சயம் எங்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறேன்' என்றார்.

இதற்கு பதில் அளித்த வேட்பாளர் வளர்மதி, ''நிச்சயம், பட்டா கிடைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்,'' என உறுதி அளித்தார்.

Advertisement