தேர்தல் விழிப்புணர்வு வாக்காளர்கள் உறுதிமொழி
பெ.நா.பாளையம்: சின்னதடாகத்தில் தேர்தல் விழிப்புணர்வு திருவிழா நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம், சின்னதடாகம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழக சட்டசபை தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தகுதியுள்ள, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள அனைத்து வாக்காளர்களும், ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
ஓட்டுப்பதிவு என்பது நம்முடைய கடமை மட்டுமல்லாமல், பொறுப்புணர்வு என்பதை வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, சின்னதடாகம் ஊராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தன்னார்வலர்களின் கலை, நடன நிகழ்ச்சிகள், வாக்காளர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி ஆகியவை நடந்தன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வெள்ளி கிலோவுக்கு ரூ.10,000 அதிகரிப்பு
-
இலங்கை ஈரான் கடற்படை வீரர்கள் 238 பேர் நாடு திரும்பினர்
-
தபால் ஓட்டு நடைமுறையில் மாற்றம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
-
ஓசையின்றி குடிநீர் கட்டணம் உயர்வு வீட்டு உரிமையாளர்கள் புகார்
-
பாகிஸ்தான் ரூ.28,000 கோடி கடன் சவுதி அரேபியா உறுதி
-
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பில் 93.70 சதவீதம் பேர் தேர்ச்சி 2வது இடத்தில் சென்னை மண்டலம்
Advertisement
Advertisement