மணல் கடத்திய இரு லாரிகள் பறிமுதல் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை
திருவள்ளூர்: திருவள்ளூரில் அனுமதியின்றி மணல் திருடி வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு லாரிகளை போலீசார் பறிமுதல் செய்து, ஒருவரை கைது செய்து, மற்றொருவரை தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவள்ளூருக்கு ஆற்று மணல் கடத்தி வருவதாக, திருவள்ளூர் புவியியல் மற்றும் சுங்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் புவியியல் மற்றும் சுங்கத்துறை உதவி இயக்குநர் பெர்னார்ட், நேற்று முன்தினம் அதிகாலை திருவள்ளூர் அடுத்த கொசவன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே வாகன சோதனை மேற்கொண்டார்.
அப்போது, திருவள்ளூர் நோக்கி வந்த ஆந்திர மாநில பதிவெண் கொண்ட இரண்டு லாரிகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டார். அப்போது லாரிகளில், தலா 10 யூனிட் ஆற்று மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதில், ஒரு லாரி ஓட்டுநர் தப்பியோடினார். மற்றொரு லாரி ஓட்டுநரான திருப்பதி அடுத்த கடிகம்வாரிப்பள்ளி பகுதியைச் சேர்ந்த மகேந்திரா, 28, என்பவரை பிடித்து, இரு லாரி மற்றும் ஓட்டுநரை, திருவள்ளூர் தாலுகா போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்த புகாரின்படி, திருவள்ளூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மேலும்
-
கேபிள் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ஜனநாயகன்: ரசிகர்கள் அதிர்ச்சி
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி