தி.மு.க., வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் வி.சி., கட்சியினருக்கு திருமாவளவன் வேண்டுகோள்
அச்சிறுபாக்கம்: மதுராந்தகம் தனி சட்டசபை தொகுதியில் உள்ள அச்சிறுபாக்கம் பேரூராட்சியில், காஞ்சிபுரம் எம்.பி., செல்வம் முன்னிலையில், வி.சி.க., தலைவர் தொல். திருமாவளவன், தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலரை ஆதரித்து, உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டுகளை சேகரித்தார்.
அமுலு பொன்மலரை ஆதரித்து வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:
தி.மு.க.,வின் ஓட்டுகள் நமக்கும், நம்முடைய ஓட்டுகள் தி.மு.க.,வுக்கும் தேவை; அதை உணர்ந்து, வி.சி., கட்சியினர் பாடுபட வேண்டும்.
தமிழகத்தில் பா.ஜ., வலிமை பெற்றால், தமிழகத்தில் வளர்ந்து வந்தால், நம்மிடையே இருக்கும் அமைதி, சகோதரத்துவம், சமத்துவம் அனைத்தையும் இழக்கும் நிலை நேரிடும்.பா.ஜ.,வுக்கு இரு முகம் உள்ளது.
தேர்தலுக்கு முன் ஒரு முகம், தேர்தலுக்குப் பின் ஒரு முகம்; இதுதான், மற்ற மாநிலங்களில் பா.ஜ., செய்து வருகிறது.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்தால், இரண்டு மாதங்கள்கூட பழனிசாமி முதல்வராக இருக்கமாட்டார்.
பா.ஜ., அதை விரும்பவில்லை. மேலும், தமிழக முதல்வரின் மகத்தான திட்டங்களை நாம் பெற மீண்டும்; அதற்கு தி.மு.க., ஆட்சி அமைய வேண்டும்.
வி.சி.க.,வினரின் ஓட்டுகள் மொத்தமாக தி.மு.க., வேட்பாளர் அமுலு பொன்மலருக்கு, உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு அளிக்க வேண்டும்.
எஞ்சிய நாட்களில் தீவிரமாக செயல்பட்டு வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பாடுபட வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து செய்யூர் சட்டசபை தொகுதியில் வி.சி.க., சார்பாக போட்டியிடும் வேட்பாளர் சிந்தனைசெல்வனை ஆதரித்து, செய்யூர், சித்தாமூர், சூணாம்பேடு, கடப்பாக்கம், கூவத்துார் உள்ளிட்ட பகுதிகளில், வி.சி.க., தலைவர் திருமாவளவன், நேற்று காலை பிரசாரம் செய்தார்.
பிரசாரத்தின் போது, திருமாவளவன் பேசியதாவது:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில் இருந்ததுபோல் அ.தி.மு.க., தற்போது இல்லை. பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தேர்தல் களத்தில் விஜயை தனியாக நிற்க வைத்ததே பா.ஜ., தான். தி.மு.க., கூட்டணிக்கு செல்லும் சிறுபான்மையினரின் ஓட்டுகளை பிரிக்க விஜயை தனியாக நிற்க வைத்து, அவர் 10 - 15 தொகுதியில் வெற்றி பெற்றால் கூட, விஜயை முதல்வர் ஆக்குவதாக, பா.ஜ., தெரிவித்துள்ளதாக தகவல் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
மேல்தள சுவர் இடிந்து விழுந்து சாலையில் சென்ற மூதாட்டி பலி :காரைக்காலில் பரபரப்பு
-
சுவற்றின் மீது பைக் மோதி வாலிபர் பலி
-
பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு
-
இறந்த நபர்கள் யார் போலீசார் விசாரணை
-
கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
-
நெய்வேலி மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் ஐக்கியம்